வருகிறது ஜனாதிபதி ஆட்சி: லாலு டென்சன்
பாட்னா:
பிகாரில் எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பூட்டா சிங்முறைப்படி இன்று பரிந்துரையை அனுப்பினார்.
இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது. சட்டசபையின் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அங்குஆட்சியமைக்க ராப்ரி தேவி-லாலு பிரசாத் யாதவாலும், பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தாலும் முடியவில்லை.
ஆட்சியமைக்கும் துருப்புச் சீட்டாக விளங்கும் லோக் ஜன் சக்தித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், யாருக்கும் ஆதரவு தரமறுத்துவிட்டதோடு, யாரிடம் இருந்து ஆதரவைப் பெறவும் மறுத்துவிட்டார். தனக்கு முதல்வர் பதவி ஆசை காட்டிய பாஜகவுக்கும்பாஸ்வான், பணியவில்லை.
இந் நிலையில் பிகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநரும் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூட்டா சிங் முறைப்படிபரிந்துரை அனுப்பியுள்ளார். இதனால் இன்றே அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படும். முதல் கட்டமாக 6 மாதங்களுக்கு இந்த ஆட்சிஅமலாகும் என்று தெரிகிறது.
அதன் பிறகும் யாராலும் ஆட்சியமைக்க முடியாவிட்டால், ஜனாதிபதி ஆட்சி மேலும் நீட்டிக்கப்படும்.
ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கினால், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இது தொடர்பானமசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.
இதற்கிடையே பிகாரில் ஜனாதிபதி ஆட்சி அமலாகக் காரணமாக இருந்த மத்திய உரத்துறை அமைச்சரும் லோக் ஜன் சக்தி தலைவருமானராம்விலாஸ் பாஸ்வானை ரயில்வே அமைச்சர் லாலு மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
லாலு கூறுகையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பிகாரில் எனது கட்சியின் ஆட்சி மீண்டும் அமையாமல் பாஸ்வான்தடுத்துவிட்டார். பாசிஸ சக்திகளுடன் பாஸ்வான் கைகோர்க்க ஆரம்பித்துவிட்டார்.
பாஜக உள்ளிட்ட மதவாத சக்திகளுடன் பாஸ்வானுக்கு மறைமுகக் கூட்டணி உள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பாஸ்வான் தந்து வரும் ஆதரவு கூட முழுமையானது அல்ல. அது சந்தேகத்துக்கிடமானது.
பிகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகளால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பிரச்சனையும் வராது. பாஸ்வானால் தான்ஜனாதிபதி ஆட்சி வந்துள்ளது. இதில் ஆளுநரையோ வேறு யாரையுமோ குறை சொல்ல முடியாது. இதற்காக பாஸ்வானை மக்கள்மன்னிக்கப் போவதில்லை.
பிகாரில் விரைவில் எனது கட்சியின் ஆட்சி அமையும். பிற கட்சிகளில் உள்ள மதசார்பற்ற எம்எல்ஏக்கள் எனக்கு மீண்டும் ஆதரவுதருவார்கள். இதனால் மீண்டும் தேர்தல் நடத்தி மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
பாஸ்வானின் கட்சியை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற்ற சோனியாவுக்கு நெருக்குதல் தருவீர்களா என்று கேட்டபோது, நான்அவ்வளவு குறுகிய பார்வை கொண்ட அரசியல்வாதியல்ல என்று பதில் தந்தார் லாலு.
முஸ்லீம் முதல்வர்: பாஸ்வான் கோரிக்கை
இதற்கிடையே ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர்களிடம் பேசுகையில், பாஜகவை விட்டுவிட்டு ஐக்கிய ஜனதா தளம் வெளியே வர வேண்டும்.அவர்களது கட்சியில் ஒரு முஸ்லீமை முதல்வர் பதவிக்கு நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அதற்கு எனது கட்சி ஆதரவு தரும்.
மற்றபடி மத்தியில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு நான் வெளியேற மாட்டேன். மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் தரப் போவதில்லை.
மாநிலத்தில் லாலு, பாஜக அல்லாத வேற்று அரசு அமைய தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.
லாலு-சிவராஜ் பாட்டீல் சந்திப்பு:
இதற்கிடையே பிகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக லாலு பிரசாத் யாதவுடன் உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் இன்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் பாட்டீலை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய லாலு,
பிகார் நிலைமை குறித்து பாட்டீலுடன் விவாதித்தேன். அடுத்து சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவுள்ளேன்.பிகாரின் இன்றைய துரதிஷ்டவசமான நிலைக்கு பாஸ்வான் தான் காரணம். தேர்தல் முடிந்தவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கஉரிமை கோருவார்கள்.
ஆனால், சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக தனித்து அதிக இடங்களைப் பிடித்த எனது கட்சியை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது
என்று சொல்லி ஆளுநரை சந்தித்துள்ள பாஜக என்றார் லாலு.அத்வானி கோரிக்கை:இதற்கிடையே ஜனாதிபதி ஆட்சி அமலாகவுள்ள பிகாரில் ஆளுநரின் ஆலோசகர்களாக நேர்மையான, திறமையான அதிகாரிகளைநியமிக்க வேண்டும் என பாஜக தலைவர் அத்வானி கோரியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்த அத்வானி நிருபர்களிடம் பேசுகையில், ஊழலையும், கிரிமினல்களையும் சமாளிக்கும்வகையில் சிறந்த அதிகாரிகளை நியமிக்குமாறு கோரினேன். பிகாரில் 15 ஆண்டு காட்டு தர்பார் நடத்தியவர்கள் (லாலு-ராப்ரி) மீண்டும்மறைமுகமாக ஆட்சி நடத்த முயல்வார்கள். அதைத் தடுக்குமாறு பிரதமரிடம் சொன்னேன் என்றார்.
-
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்! -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட்












Click it and Unblock the Notifications