இந்தியா-பாக் முதல் டெஸ்ட் நாளை துவக்கம்
மொகாலி:
இந்தியா-பாகிஸ்தான் மோதும் முதல் கிரிக்கெட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது.
இன்சமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில்விளையாடுவதற்காக கடந்த மாதம் இந்தியா வந்துள்ளது.
இந்த அணி முதலில் பயிற்சி ஆட்டமாக வாரிய தலைவர் அணியுடன் 3 நாள் போட்டியில் மோதியது. இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
3 நாள் போட்டியில் பாகிஸ்தானின் ஆட்டம் சுமாராகவே இருந்தது. முதலில் ஆடிய அந்த அணி 275 ரன்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய வாரிய தலைவர் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 100ரன்களுக்கு மேல் எடுத்தது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது.இதையொட்டி மொகலி வந்திறங்கிய இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வாகா எல்லை வழியாக பஸ்களில் மொகாலிக்குவந்தவண்ணம் உள்ளனர். வாகா எல்லையில் அவர்களுக்கு இந்திய மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்துவருகின்றனர்.
அட்டாரி பகுதியிலிருந்து சண்டிகாருக்கு இயக்கப்படுவதாக இருந்த சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் ரசிகர்கள் பஸ்களில் வந்து குவிகின்றனர்.
டெஸ்ட் போட்டி நடைபெறுவதையொட்டி மொகாலியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 9.30 மணியளவில் தொடங்கும் இப்போட்டியை இந்தியாவில் தூர்தர்ஷன் நேரடியாகஒளிபரப்புகிறது. சாட்டிலைட் உரிமையை சோனி டி.வி. நிறுவனம் பெற்றுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications