திருக்குறுங்குடி: 4 பேர் காட்டு பங்களாவில் ஆஜர்!
காஞ்சிபுரம்:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோவில் கணக்காளர் முருகேசன் மர்மச் சாவு தொடர்பான வழக்கில்திருக்குறுங்குடியைச் சேர்ந்த நான்கு பேர் காஞ்சிபுரம் தனிப் படை போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
திருக்குறுங்குடி கோவில் கணக்காளரான முருகேசன், ரயில்வே தண்டவாளம் அருகே மர்மமான முறையில் இறந்துகிடந்தார். ஜெயேந்திரருக்கு எதிராக செயல்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கோவில் மேலாளர் திருநாராயணன், திருக்குறுங்குடியைச் சேர்ந்த நம்பி பாண்டியன்,திருநாமம் என்ற ராதா, சிம்சன் பாண்டியன் எனப்படும் நம்பி நாராயணன் ஆகியோரை விசாரணைக்கு வருமாறுகாஞ்சி தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை. மாறாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர். ஜாமீன்வழங்கிய மதுரை உயர்நீதிமன்றம், விசாரணைக்கு காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவில் ஆஜராக உத்தரவிட்டது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நான்கு பேரும் காட்டுப் பங்களாவுக்கு வந்தனர். அங்குள்ளபதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் திரும்பிச் சென்றனர்.
இதேபோல, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை முன் ஜாமீனில் உள்ள டி.வி.எஸ். நிறுவனஊழியர்கள் சேஷாத்திரி, செல்வம் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பங்களாவுக்கு வந்தனர்.
மற்ற இரண்டு ஊழியர்களான ரங்கநாதன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் திங்கள்கிழமை ஆஜராகிறார்கள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications