தப்பிக்க பார்க்கும் ப.சிதம்பரம்: ஜெ தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை :

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு உரிய நிதியை ஒதுக்காமல், ஏதாவது காரணம் சொல்லி நிதியமைச்சர்ப.சிதம்பரம் தப்பிக்கப் பார்க்கிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து சேது சமுத்திரத் திட்டம்குறித்தும், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றார். அப்போது,

சபாநாயகர் காளிமுத்து: உங்கள் (திமுக) உறுப்பினர் பட்ஜெட் மீது பேசும்போது இது குறித்து விவாதிக்கலாம்.

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் தந்தனர்.

காளிமுத்து: நீங்கள் (திமுகவினர்) அவையில் திட்டமிட்டு குழப்பம் விளைவிப்பது சரியல்ல. இப்போது காங்கிரஸ்உறுப்பினர் ஞானசேகரன் பேசலாம்.

ஞானசேகரன்: எதிர்க் கட்சியினர் பேசுவதையெல்லாம் தவறாகப் பார்க்கக் கூடாது. இந்த விஷயத்தில் அமைச்சர்கள்முதல்வருக்கு ஆலோசனை கூற வேண்டும்.

நிதியமைச்சர் பொன்னையன்: நாங்கள் சொல்லிக் கேட்கும் அளவுக்கு அவர் இல்லை. அவர் தெளிந்தசிந்தனையுடன் இருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா: ஆலோசனை சொல்ல தேவையில்லை என்று அமைச்சர் சொன்னது அன்பின்காரணமாகத்தான். அதற்காக எனக்கு யாரும் யோசனை சொல்லவில்லை என்று அர்த்தமல்ல. எந்த முடிவையும்மூத்த அமைச்சர்களுடன் பேசித்தான் எடுக்கிறேன்.

அமைச்சர் வளர்மதி: அம்மாவுக்கு சொல்லும் யோசனையை காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தனது கட்சிக்குசொன்னால், உங்கள் கட்சியாவது வளரும்.

ஞானசேகரன்: சென்னையில் ரூ. 1,000 கோடி செலவில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமலாக்கப்படும் எனமத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை இத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசுபேசவில்லை.

முதல்வர் ஜெயலலிதா: இது தொடர்பாக நான் தெளிவான அறிக்கை வெளிட்டுள்ளேன். இந்தியா முழுவதும் இத்திட்டத்துக்கு என ரூ. 1000 கோடியை அறிவித்துள்ளார்கள் சிதம்பரம். சென்னைக்கு என்று மட்டும்அறிவிக்கவில்லை. ரூ. 1000 கோடி ஒதுக்குவது போல பாசாங்கு செய்துவிட்டு வெறும் ரூ. 5 கோடியை மட்டுமேஒதுக்கியுள்ளார். ஆனால், 1000 கோடி தந்ததாகவும் அதை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என்பது போலவும்சிதம்பரம் பேசுவது உண்மைக்குப் புறம்பானது.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்: இத் திட்டம் தொடர்பாக டெண்டர் விடப்பட்ட பின்னர் முழு நிதியும் ஒதுக்கப்படும்என சிதம்பரம் கூறயிருக்கிறார். அவசர செலவுக்குத் தான் ரூ. 5 கோடியை ஒதுக்கியுள்ளார். மீண்டும் மீண்டும்மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம்.

ஞானசேகரன்: எங்களுடன் வாருங்கள். வேண்டிய நிதியை வாங்கித் தருகிறோம். சுனாமி நிவாரணப் பணிக்குஉரிய நிதியை சிதம்பரம் ஒதுக்கவில்லை, அவருக்கு நாணயம் இல்லை, வக்கில்லை என்று முதல்வர் பேசினார்.ஆனால், இப்போது மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக நிதியமைச்சர் பொன்னையனே கூறியிருக்கிறார். மேலும்இது முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியிருக்கிறார். தமிழக அரசுக்கு வக்கிலாததால் தானே அங்கு போய்நிதி கேட்கிறோம்.

அமைச்சர் பொன்னையன்: மாநில அரசுக்கு வக்கில்லாமல் இல்லை. சுனாமி நிவாரணத்துக்கு நிதி தர வேண்டியதுமத்திய அரசின் பொறுப்பு.

எஸ்.ஆர்.பி: மாநில அரசு உரிய நிவாரணத் திட்டத்தை அனுப்பினால் நிதியை தருவார்கள்.

ஜெயலலிதா: நாங்கள் திட்டத்தை அனுப்பிவிட்டோம். எங்கள் கடமையை முடித்துவிட்டோம். ஆனால்,எப்படியாவது எங்கள் அரசை குறை சொல்ல வேண்டும் என்று பகீரத முயற்சி செய்கிறீர்கள்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திலும் குளோபல் டெண்டர் விட்டுவிட்டோம். அதை மதிப்பீடு செய்ய 60 நாட்கள்ஆகும். இது சிதம்பரத்துக்கு தெரியாதது அல்ல. ஆனால், எங்களிடம் இருந்து டெண்டர் முடிவுகள் வராததால் நிதிஒதுக்கப்படவில்லை என்று சிதம்பரம் பேசியிருக்கிறார். ஏதாவது காரணம் சொல்லி நிதியமைச்சர் ப.சிதம்பரம்தப்பிக்கப் பார்க்கிறார் என்றார்.

இவ்வாறு காரசாரமாக விவாதம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+