"அம்மா"வை பாராட்டிய பாஜக எம்எல்ஏ!
சென்னை:
மத்திய பட்ஜெட்டை கடுமையாக தாக்கியும், தமிழக அரசின் பட்ஜெட்டை ஓஹோவென புகழ்ந்தும் பேசி முதல்வர்ஜெயலலிதாவின் பாராட்டுக்கு உள்ளானார் பாஜக எம்.எல்.ஏவான அரசன்.
சட்டசபையில் இவரது பேச்சை முதல்வர் ஜெயலலிதா உள்பட அதிமுகவினர் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர் அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த அரசன், பின்னர் திருநாவுக்கரசர்பாஜகவில் இணைந்தபோது தானும் இணைந்தார். இப்போது பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மத்திய அரசை கடுமையாக சாடினார்.தமிழக அரசை வெகுவாக புகழ்ந்தார்.
அரசன் பேசிய பேச்சு:
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதேபோல தனதுபதவிக்காலம் முழுவதும் பட்ஜெட் போட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை அமெரிக்காவும், கேரளாவைஆப்பிரிக்காவும், கர்நாடகத்தை கனடாவும், ஆந்திராவை ஆஸ்திரேலியாவும் விலைக்கு வாங்கியிருக்கும்.
ஆனால் தமிழகத்தில் அதற்கு நேர் மாறாக அருமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்கள். நமது சொந்த மூலாதாரப்பொருட்களை மட்டுமே நம்பி இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதான் உண்மையான சுதேசிபட்ஜெட்.
சுதேசிக் கொள்கையை தமிழக அரசுதான் சரியாக நடைமுறைப்படுத்துகிறது என்றார் அரசன்.
அரசனின் இந்த சுதேசி பேச்சை முதல்வர் ஜெயலலிதா வெகுவாக ரசித்தார். அம்மாவின் ரசிப்பைக் கண்ட அதிமுகஉறுப்பினர்களும் உற்சாகமாகி மேசைகளைத் தட்டி அரசனை உற்சாகப்படுத்தியவாறு இருந்தனர்.
அரசின் பேச்சுக்கு அவ்வப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தாலும், அதிமுகவினன் உற்சாகக்கூக்குரலில் காங்கிரஸாரின் குரல் எடுபடவே இல்லை.
விரைவில் அரசன் அதிமுகவுக்குப் போனாலும் ஆச்சரியமில்லை.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications