மாமனாரை அப்பாவாக்கிய நகராட்சி தலைவர்: சிபிஐ கிடுக்கிப் பிடி!
சென்னை :
மாமனாரை அப்பாவாக காட்டி ரயில்வேயில் வேலை பார்த்த சென்னை அம்பத்தூர் நகராட்சித் தலைவர் ருக்மாங்கதன் வீட்டில்சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை அம்பத்தூர் நகராட்சித் தலைவராக இருப்பவர் ருக்மாங்கதன். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். ரயில்வேதுறையிடம் கொடுத்த சான்றிதழில் தனது தந்தையின் பெயர் ரங்கசாமி என்று கூறியிருந்தார்.
அங்கு பணியாற்றிக் கொண்டே நகராட்சித் தலைவர் பதவியையும் பிடித்தார். அரசுப் பதவியில் இருப்பவர் தேர்வு செய்யப்பட்டஅரசியல் பதவியிலும் இருக்க முடியாது என்பதால், தனது இனிஷியலை மாற்றினார்.
நகராட்சிப் பதவியேற்கும்போது கொடுத்த சான்றிதழ்களில் தனது தந்தையின் பெயராக கிருஷ்ணசாமி என்று குறிப்பிட்டிருந்தார்.கிருஷ்ணசாமி என்பது அவரது மாமனாரின் பெயராகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு கொடுத்து ரயில்வே பணியிலிருந்து விலகிவிட்டு ஓய்வூதியம் பெற்று வந்தார்ருக்மாங்கதன்.
அவருடைய இந்த பிராடுத்தனம் குறித்து ரயில்வே துறைக்கு தாமதமாகவே தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஓய்வூதிய்தருவதை ரயில்வே நிறுத்தியது.
நகராட்சிப் பதவியில் இருந்து கொண்டே ரயில்வேயிலும் பணியாற்றி மோசடி செய்த ருக்மாங்கதன் குறித்து முழு விசாரணைநடத்துமாறு சிபிஐயிடம் ரயில்வே கேட்டுக் கொண்டது.
இதையடுத்து சிபிஐ விசாரித்து வந்தது. இன்று 7 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் அம்பத்தூரை அடுத்த பாடியில் உள்ளருக்மாங்கதனின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அவரது ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சோதனையிட்டனர். அதில்,ருக்மாங்கதன் தனது அப்பா பெயராக ராமசாமி என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே அம்பத்தூர் நகராட்சியில் ஏராளமான முறைகேடுகள் செய்ததாக ருக்மாங்கதன் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார்வழக்கப் பதிவு செய்து சமீபத்தில் அவரது வீட்டில் சோதனை நடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications