தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மீதான பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில்அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைக் கண்டித்து பல இடங்களில் அதிமுகவினர் கலவரம் செய்தனர்.
தர்மபுரியில் கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்ஸுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் 3மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணையை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தியது. கேஸ் கட்டையே காணவில்லைஎன்று கூட போலீசார் கூறும் அளவுக்கு இந்த வழக்கில் அலட்சியம் காட்டப்பட்டது.
உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்த பிறகு தற்போது சேலம் நீதிமன்றத்தில் விசாரணை முதலில் இருந்து மீண்டும்தொடங்கியுள்ளது. நேற்று இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணராஜா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 31 பேரும் கோர்ட்டில் ஆஜராயினர்.
இந்த வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் தன்னுடையவழக்கறிஞரை மாற்ற வேண்டியிருப்பதால் மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார்.
இதற்கு நீதிபதி கிருஷ்ணராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். விரைவில் வழக்கறிஞரைத் தேர்வு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இலவச சட்ட உதவி மையத்திலிருந்து ஏதாவது ஒரு வழக்கறிஞரை நீதிமன்றமே நியமித்துவிடும்என்று நீதிபதி கடுமையாக கூறினார்.
முனியப்பனின் கோரிக்கை காரணமாக விசாரணை இம்மாதம் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை பஸ்ஸை எரித்த அதிமுகவினர் போலீசாரின் உதவியுடன் பல வகைகளிலும் தாமதப்படுத்திவந்தது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications