ஜெயலலிதாவின் மகளிர் தின வாழ்த்து
சென்னை:
ஆண்களின் கோட்டை என்று கூறப்படும் துறைகளில் பெண்கள் வியத்தகு சாதனை படைத்து வருகிறார்கள் என்று முதல்வர்ஜெயலலிதா மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
உலகெங்கிலும் உள்ள மகளிரும், மகளிர் அமைப்புகளும், தங்களுடைய நாடு, இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம்,அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு, சமத்துவம், நீதி, கண்ணியம், வளர்ச்சி ஆகிய தங்களது லட்சியங்களை எய்திடதங்களை மறு அர்ப்பணம் செய்து கொள்கிற ஒரு தினம்தான் மகளிர் தினம்.
மகளிருக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பது என்னுடைய நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு கொள்கையாகும்.அனைத்துப் பொதுக் கொள்கைகளுமே மகளிர் தங்களது உரிமைகளையும், அதிகாரங்கைளயும் பெறுவதற்கான வாய்ப்புகளைஉருவாக்கித் தருவனவாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை ஆகும்.
இதுவே, தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு இயக்கம், நாட்டிலேயேமுதன் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் அதிரடிப்படை, அனைத்து மகளிர் காவலர் அணிஆகியவற்றை உருவாக்கியதற்கும்,
மகளிரைடேய தன்னம்பிக்கை உணர்வையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திட மகளிருக்கான சேவைகளின் தன்மையை உயர்த்திபல்வேறு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டதற்கும் ஆதார சுருதியாக விளங்கியது.
ஆண்களின் கோட்டைகள் என இதுவரை கருதப்பட்டு வந்த பல துறைகளில் இன்றைக்கு மகளிர் வியத்தகு சாதனைகள் பலபடைத்து வருவதை அன்றாடம் நாம் கண்டு வருகிறோம். இந்தச் சாதனையின் விளைவாகப் பிறந்த புதிய நம்பிக்கையைஆக்கப்பூர்வமான வழிகளில் மேலும் வலுப்படுத்த மகளிர் விடுதலைச் சுடரை முன் எடுத்துச் சென்று மிகவும் நலிந்த, உரியவாய்ப்புகள் கிடைக்கப் பெறாத தங்களின் சகோதரிகளின் முன்னேற்றத்துக்கு தங்களுடைய அறிவு, திறன், ஆற்றல்ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
சோதனைகளும், சவால்களும் நிறைந்த இன்றையச் சூழ்நிலையில் சமத்துவம், கண்ணியம், வாய்ப்பு மற்றும் வாழ்க்கையின்முழுமையான வளங்களைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றைப் பெற்றிட நம்மை நாமே மறு அர்ப்பணம் செய்துகொள்வோமாக என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications