தமிழகத்தில் வாழ குடுத்து வச்சுருக்கனும்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை :

ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நக்சலைட்டுகள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். ஆனால் அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்திலோ நக்சலைட்டுகள் தலையெடுக்க முடியாத அளவுக்கு அரசு உரியநடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன்,

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாகி வருகிறது. கூலிப் படை ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. வேலூர்நகைக் கடையில் 2 பேர் கொல்லப்பட்டனர். இரண்டாண்டுகள் ஆகியும் இதில் போலீசார் துப்பு துலக்கவில்லை.சங்கர மடம் கொலையில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. உளவுத்துறை முறையாகசெயல்பட்டிருந்தால் இவர்கள் மீது முன்பே நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

திருவண்ணாமலையில் தியேட்டருக்குள் டைம்பாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அருகே நாட்டுவெடிகுண்டுகள் பிடிபட்டுள்ளன. பெங்களூருக்கு சென்னையில் இருந்து இயந்திர துப்பாக்கிகள தீவிரவாதிகள்அனுப்பியுள்ளார்கள்.

தமிழகத்தில் அணுகுண்டு கலாச்சாரம் பரவும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை நமது காவல்துறை தான்.இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழ்நாடு தான். காங்கிரஸ் ஆளும்ஆந்திராவில் தான் நக்ஸலைட்டுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சி புரியும்கர்நாடகத்திலும் நக்சலைட்டுகள் சுதந்திரமாக உலவி வருகிறார்கள்.

இதனால் மக்கள் பெரும் பீதியுடன் வாழ்கிறார்கள். எப்போது என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வில் மக்கள்உள்ளனர்.

ஆந்திராவில் நக்சலைட்டுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார் ஒரு எஸ்.பி. நக்சலைட்டுகளின் நெருக்கடிகாரணமாக, காங்கிரஸ் கட்சியினர் மேலிடத்தில் சொல்லி, அந்த எஸ்.பியை இப்போது கட்டாய விடுப்பிலஅனுப்பிவிட்டனர்.

காவல்துறையினர் அங்கு சோர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கு சுதந்திரம் இல்லை, ஆனால் நக்சலைட்டுகளோ படுசுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

தமிழகத்தில் அந்த நிலை இல்லை, தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இங்கு நக்சலைட் அமைப்புகளுக்குநான் தடை விதித்துள்ளேன். காவல்துறையினர் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஆந்திராவிலிருந்தோ, கர்நாடகத்திலிருந்தோ நக்சலைட்டுகள் தமிழகத்திற்குள் ஊடுறுவி விடாமல் தடுக்கும்பொருட்டு எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீங்கள் (எம்எல்ஏ ஞானசேகரன்) தமிழகத்தில் வாழ்ந்து வருகிறீர்கள். நீங்கள் கொடுத்த வைத்தவர். எதிர்க்கட்சியினருக்கு எங்கள் மீதும் ஆட்சி மீதும் கோபம் இருக்கலாம். அதை எங்கள் மீது காட்டுங்கள். காவல்துறை மீதுகாட்ட வேண்டாம் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+