நெல்லை பல்கலை. துணைவேந்தரான பி.எச்.பாண்டியன் மனைவி!
சென்னை:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முன்னாள் தமிழக சட்டசபைசபாநாயகரும், அதிமுக எம்.பிக்கள் குழுவின் தலைவருமான பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன்நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைத் தலைவராக பணியாற்றி வரும் டாக்டர் சிந்தியா பாண்டியன்,நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அவர் அப்பொறுப்பில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
சிந்தியா பாண்டியன், 26 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில்பல்வேறு பொறுப்புகளில் அவர் இருந்துள்ளார். பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் என்ற புதிய படிப்பையும் அவர்உருவாக்கி அமல்படுத்தியவர்.
இவரது கணவரான பி.எச்.பாண்டியன் தற்போது அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.இவர்களது மகன் மனோஜ் பாண்டியன், சேரன் மகாதேவி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆவார்.
சபாநாயகராக இருந்தபோது தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக கர்ஜித்த பி.எச்.பாண்டியன் கொஞ்சகாலமாக அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications