பிரஞ்ச் ஓப்பன்: சானியா நம்பிக்கை
மும்பை:
உலகத்தர வரிசையில் முதல் 50 பேர் பட்டியலில் இடம்பிடிப்பேன் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா கூறினார்.
துபாய் ஓப்பன் போட்டியின் இரண்டாவது சுற்றில் சானியா, அமெரிக்க ஓப்பனில் கோப்பையை வென்றஸ்வெட்லானாவை தோற்கடித்து சாதனை படைத்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகத்தர வரிசை பட்டியலில் 200வது இடத்திற்கு மேல் இருந்தவர், கடந்த இருமாதங்களிலேயே 77வது இடத்திற்கு முன்னேறிவிட்டார்.
மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்த சானியா நிருபர்களிடம் கூறுகையில், துபாய் ஓப்பன்போட்டியில் விளையாடும்போது எனது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறிது நாட்கள்ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்தில் நான் மீண்டும் எனது விளையாட்டை துவங்கி விடுவேன். இம்மாத இறுதியில் மியாமிசென்று விளையாட உள்ளேன். அதன் பிறகு பிரான்சில் சில போட்டிகளில் கலந்து கொண்டு விட்டு டெல்லியில்நடைபெற உள்ள பெடரேஷன் கோப்பை போட்டியிலும் கலந்து கொள்கிறேன்.
பிரெஞ்ச் ஓப்பன் போட்டி களிமண்ணாலான மைதானத்தில் நடைபெறும். எனக்கு இது போன்ற மைதானத்தில்அதிகமாக ஆடி பழக்கமில்லை. ஆனாலும் கடுமையாக பயிற்சி செய்து பிரெஞ்ச் ஓப்பனிலும் சிறப்பாகவிளையாடுவேன் என்றார்.
டென்னிஸில் சானியா சாதனை மேல் சாதனை படைத்து வருவதால் பல சர்வதேச நிறுவனங்கள் அவரை விளம்பரமாடலாக்க போட்டி போட்டு வருகின்றன. இத்தாலியைச் சேர்ந்த லோட்டோ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சானியாமிர்சாவின் கையெழுத்திட்ட பொருட்களை விற்பனை செய்ய முன் வந்துள்ளது.
இதற்கு முன்பு டென்னிஸ் உலகில் அகாசி, ஸ்டெபி கிராப், ஸ்டீபன் எட்பெர்க் ஆகிய மூன்றே பேருக்குத் தான்இந்த பெருமை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications