இன்று சிவ ராத்திரி: கோவில்களில் சிறப்பு பூஜைகள்
சென்னை:
இன்று சிவ ராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சிவனுக்கு மிகவும் பிடித்த இந்த ராத்திரியை சிவ சதுர்த்தசி என்றும் கூறுவார்கள். பிரதோஷ சமயம் முதல் நடு இரவுவரை கிருஷ்ண சதுர்த்தசி வியாபித்திருக்கும் அன்று தான் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி என்பது அடி, முடி, எல்லை ஆகியவை இல்லாமல் ஜோதி வடிவில் ஜோதிர்லிங்கமாக ஆகாயத்திற்கும்,பூமிக்கும் இடையே விளங்கும் சிவனை நாம் சிறப்பாக வழிபடுகின்ற இரவாகும்.
இத் தினத்தில் சிவபெருமானை வணங்கி வழிபடுவோருக்கு எல்லா விதமான சிறப்புகளும் கிடைக்கும் என்பதுஐதீகம். உலகம் நீடித்திருக்கும் காலம் கல்பம் என அழைக்கப்படுகிறது. கல்ப முடிவில் பரமேஸ்வரர் பிரளயத்தைஉண்டாக்கி உலகை அழிக்கிறார்.
அதனால் எங்கும் இருள்மயமாகிறது. அனைத்தும் அழிவுற்ற உலகின் அவல நிலையைக்கண்டு ஈஸ்வரிகலங்குகிறார். இதனால் மீண்டும் உலகை உண்டாக்கித் தரவேண்டுமென்று ஈஸ்வரனை பிரார்த்திக்கின்றாள்.
உடனே ஈசன் மனமிறங்கி ஜீவராசிகள் அனைத்தும் உயிர் பெற்று எழுமாறு அருள் புரிகின்றான். இதனால் ஈஸ்வரிமகிழ்ச்சி அடைகிறாள். இந்த சுபராத்திரியே சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
காளஹஸ்தியில் ப.சிதம்பரம்:
சிவராத்திரியையொட்டி காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோயிலில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் தரிசனம்செய்தனர்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications