ஸ்டாலினுக்கு கொலை மிரட்டலா?: ஜெ. கிண்டல்
சென்னை :
மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகக் கூறுவது ஆச்சரியமாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதாநக்கலாக கூறினார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன்பேசுகையில்,
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஸ்டாலினைக் கொல்லக்கூட கூலிப் படை ஏவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை கூறியுள்ளது. எனவே அவருக்கு பாதுகாப்பு கொடுக்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா: ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல், யாரோ அவரைக் கொலை செய்யமுயன்றார்கள் என்ற செய்தி எனக்குப் புதிதாகவும், வியப்பாகவும் உள்ளது.
அவர் (ஸ்டாலின்) பாவம் யாரையும், எதையும் சொல்ல மாட்டாரே, அவர் எதுவும் பேசுவது கூட இல்லையே.அவரைப் போய் ஏன் கொல்ல வேண்டும் என்று ஜெயலலிதா நக்கலாக கூறினார்.
ஜெயலலிதாவின் பேச்சை அதிமுக உறுப்பினர்கள் மேசைகளை பலமாக தட்டி வரவேற்றனர்.
திமுக உறுப்பினர்களோ நெளிந்தனர். கேள்வி கேட்ட ஞானசேகரனும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்: இது போன்ற பிரச்சனைகளைகேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உறுப்பினர் சொல்வது என்ன என்று கேளுங்கள் என்றார்.
இதையடுத்து ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து என்ற பத்திரிக்கை செய்தியை வைத்து திமுகவினர் பேச முயன்றனர்.இதை அதிமுகவினர் எதிர்த்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications