காஞ்சி ஸ்ரீவைஷ்ணவ மட மேலாளர் கொலை: ஸ்ரீபெரும்புதூர் மட நிர்வாகி கைது
காஞ்சி:
காஞ்சிபுரத்தில் உள்ள உத்தராடி ஸ்ரீவைஷ்ணவ மடத்தின் மேலாளர் ஸ்ரீநிவாச்சார் கொல்லப்பட்ட வழக்கில் அவரது நண்பரும்இதே மடத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையின் நிர்வாகியுமான ராமன்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீநிவாச்சார் மடத்துக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த இவர் காஞ்சியில் உள்ள 100 ஆண்டு பழமையான இந்த மடத்தின் மேலாளராக இருந்துவந்தார்.
கொலை நடந்தபோது, இதே மடத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையின் பொறுப்பாளரான ராமன்ஜியும் காஞ்சி மடத்தில் இருந்தார்.
இருவரும் இரவில் உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு தனித்தனி அறைகளில் தூங்கப் போய்விட்டதாகவும் காலையில் பால்காரர்வந்து சொன்ன பிறகு தான் ஸ்ரீநிவாச்சார் கொல்லப்பட்டு தெரிந்தது என்றும் ராமன்ஜி போலீசாரிடம் கூறினார்.
இவரது பேச்சை நம்பி போலீசார் பலரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால், இறுதியில் இந்தக் கொலையையே ராமன்ஜி தான்செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் வந்தது. இதையடுத்து உண்மையைக் கண்டறியும் கருவி மூலமாக அவரிடம் விசாரணைநடத்தப்பட்டது.
அப்போது இந்தக் கொலையைச் செய்ததை ராமன்ஜி ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
வட மாநிலங்களில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திவ்யதேச புனித யாத்திரை வரும் பக்தர்கள் இந்த வைஷ்ணவ மடத்தில் தங்கிச்செல்வது வழக்கம். இதனால் ஸ்ரீநிவாச்சாருக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்துள்ளது.
ஆனால், இதே மடத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையை கவனித்து வந்த ராமன்ஜி வருமானம் இல்லாமல் வாடியுள்ளார். இதையடுத்துஸ்ரீநிவாச்சாரைப் போட்டுத் தள்ளிவிட்டால், இந்த மடத்தின் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று எண்ணி இக்கொலையை அவர் செய்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து ராமன்ஜியை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மடத்தின் கிணற்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலையாகி அதில் சங்கராச்சாரியார் உள்ளிட்ட 26 பேர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் உச்ச கட்டத்தில் இருந்தபோது இந்தக் கொலையும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications