நெல்லை அருகே அரசு பஸ் மீது வெடிகுண்டு வீச்சு!
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு அரசு பஸ் மீது இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த பஸ்ஸை ஒட்டி வந்த டிரைவர் சுப்பிரமணியம் என்பவர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
நெல்லை மாவட்டம் சென்னப்பட்டி என்ற இடத்திலிருந்து அரசு பஸ்ஸை திருநெல்வேலி நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தேன்.
அரியகுளம் அடுத்துள்ள சாரதா நகர் அருகே வந்தபோது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் பஸ் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. ஆனால் குண்டு வெடிக்கவில்லை.
இதையடுத்து அந்த ஆட்டோ கும்பல் மீண்டும் கே.டி.சி.நகர் அருகேயுள்ள காமாட்சி நகர் என்ற இடத்தில் மீண்டும் பஸ் மீது குண்டு வீசியது. இந்தக் குண்டு வெடித்தது, ஆனால் பஸ்சுக்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் போலீஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரித்தபோது வெடிகுண்டு எதுவும் வீசப்பட்டதாகவோ, வெடித்ததாகவோ தடயம் கிடைக்கவில்லை.இதுகுறித்து டிரைவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications