ஜெவிடம் வாங்கி கட்டிக் கொண்ட கம்யூ. எம்எல்ஏ
சென்னை:
பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஹேமச்சந்திரன் பேசுகையில், பொருளாதார தாராளமயமாக்கத்தைஎதிர்த்துப் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ஹேமச்சந்திரன் உலக மயமாக்கல் தவறு, தனியார் மயமாக்குதல்தவறு என்று பேசுகிறார். ஆனால் 1991ம் ஆண்டே இவற்றை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது. அப்போது இதேகம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் அரசுக்கு ஏன் ஆதரவு கொடுத்தார்கள்?
இவர்கள் வெத்து வேட்டுக்கள், மேடையில்தான் வீராவேசமாக முழங்குவார்கள், போராட்டம் நடத்துவார்கள்.ஆனால் அதை செயல்படுத்தும் மத்திய அரசை ஆதரிப்பார்கள். இப்போதும் அதைத்தான் செய்துகொண்டுள்ளார்கள்.
இவர்கள் அளவுக்கு நாங்கள் அறிவாளிகள் கிடையாது. ஒரு கொள்கையை எதிர்த்தால், அந்தக் கொள்கையைஆதரிக்கும் கட்சியையும் நாங்கள் எதிர்ப்போம். ஒரு கொள்கையை ஆதரித்தால், அதை ஆதரிக்கும் கட்சியையும்நாங்கள் ஆதரிப்போம்.
ஆனால் கம்யூனிஸ்டுகளோ, தங்கள் கொள்கைக்கு எதிரானது என்று கூறிக் கொண்டு உலகமயம், தாராள மயம்,தனியார்மயம் ஆகியவற்றை ஆதரிக்கும் மத்திய அரசை ஆதரிக்கிறார்கள். சலுகைகளை அனுபவிக்க வேண்டும்.அந்தப் பேராசையினால்தான் மத்திய அரசுக்கு இவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள்.
தமிழக அரசு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தை ஆரம்பித்தது முதல் அந்தத் திட்டம் குறித்து சட்டசபையில்தவறாகவேப் பேசி வருகிறார் ஹேமச்சந்திரன். நானும் பலமுறை அவருக்கு விளக்கி விட்டேன். இன்னும் அதுஅவருக்கு விளங்கவில்லை.
இந்தத் திட்டம் ஏழைகளுக்கு எதிரானது என்றே அவர் தொடர்ந்து தவறாகப் பேசி வருகிறார். எப்போதுஇதுகுறித்துப் பேசினாலும் அரசைக் குறை கூறியே பேசி வருகிறார்.
அமைச்சர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். இனிமேல் ஹேமச்சந்திரன் இதுகுறித்து என்ன சொன்னாலும்,அதற்கு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டாம். நானும் பதில் சொல்லப் போவதில்லை. கிளிப் பிள்ளைக்குச்சொல்வது போல எத்தனை முறை சொன்னாலும் அதை அவர் ஏற்றுக் கொள்வதில்லை என்று கடுப்புடன் கூறினார்ஜெயலலிதா.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications