பரிதி இளம்வழுதி வெளியேற்றம்; திமுக வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார். இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.
இன்று சட்டசபை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுமாறு அதிமுக உறுப்பினர் பொன்னேரி சுந்தரத்தை சபாநாயகர் காளிமுத்து அழைத்தார். அப்போது சுந்தரம் திமுகவை கடுமையாக விமர்ச்சித்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட திமுக உறுப்பினர் பரிது இளம்வழுதி சபாநாயகரை நோக்கி ஆவேசமாக,
அதிமுகவினர் மரபுகளை மீறினால் அது உங்களது கண்களுக்குத் தெரியாது, அவர்கள் விதிமுறைகளை மீறிப் பேசினால் அதை நீங்கள் கண்டு கொள்ள மாட்டீர்களா என்றார்.
இதனால் கோபமடைந்த சபாநாயகர் காளிமுத்து பரிதியை அமருமாறு கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து பரிதி சப்தமாக பேசியதால் அவரை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள், பரிதியை வெளியேற்ற வந்தனர். ஆனால், பரிதி கட்டுப்பட மறுத்தார். இதையடுத்து மிகுந்த சிரமத்திற்கு பின் பரிதியை அவையிலிருந்து காவலர்கள் வெளியேற்றினர்.
இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications