திண்டுக்கல் திமுக மாநாடு தொடக்கம்
திண்டுக்கல்:
திமுகவின் மண்டல மாநாடு இன்று திண்டுக்கலில் தொடங்கியது.
மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்ட திமுகவினர் இணைந்து நடத்தும் இம் மாநாட்டுக்காக கோட்டைப் பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் என்று பெயரிடப்பட்டுள்ள இங்கு 800 அடி நீள பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுத் திடலின் முகப்பு ரோமானிய அரண்மனை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை பாண்டியன் ரெயில் மூலம் திண்டுக்கலை வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் அண்ணா சிலைக்கு கருணாநிதி மாலை அணிவித்து விட்டு பிறகு மாநாட்டு பந்தலுக்கு வந்தார். அவருடன் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, முதன்மை செயலாளர் துரை முருகன் ஆகியோர் வந்தனர்.
கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் பந்தலின் முன்பு 83 அடிக் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இதில் வண்ணை தேவகி கொடியேற்றினார்.
மாநாட்டை முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் திறந்து வைத்தார். கோ.சி. மணி தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து பல்வேறு பேச்சாளர்கள் பேசுகின்றனர். இறுதியாக பொதுச்செயலாளர் அன்பழகன் நிறைவுரையாற்றுகிறார்.
இரண்டாவது நாள் மாலை 4 மணியளவில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே. வாசன், ராமதாஸ், வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் நல்லக்கண்ணு,
தமிழ் மாநில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன், தமுமுக மாநில செயலாளர் ஜவாஹிருல்லா, எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், அ.இ.மூ.மு.க.தலைவர் டாக்டர். சேதுராமன், பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் பலர் பேசுகின்றனர்.
நிறைவாக இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி பேருரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி திண்டுக்கலில் இருந்து மதுரை வரை சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான திமுக கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications