திருவண்ணாமலை கோயில் சிலைகள் ஆட்டம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயில் சிலைகள் ஆட்டம் கண்டுள்ளதால், அதை சரி செய்ய ரூ. 1 லட்சம்செலவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
அண்ணாமலையார் கோயில் மூலஸ்தானத்தில் உள்ள அண்ணாமலையார் சிலையும், உண்ணாமலையம்மன் சன்னதியில் உள்ள சிலையும்ஆட்டம் கண்டுள்ளதாக கோயில் குருக்கள் தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு இங்கு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மூலஸ்தான சிலைகளின் பீடத்தைத் தரையுடன் சேர்க்க,அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 8 வகையான மருந்துகளை இடித்து, பீடத்திலும், தரையிலும் சாத்தும்போதுதரையுடன், பீடம் இணைக்கப்படும்.
அப்போது தவறான விகிதத்தில் மருந்து சாத்தப்பட்டதால் சிலைகளின் பீடத்துக்கும், தரைக்கும் இடையே இடைவெளி எழுந்து அதனால்சிலைகள் ஆட்டம் கண்டிருக்கலாம் என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்போது இதை சரி செய்ய ரூ 1 லட்சம் செலவில் மஹாஸ்நபனாபிஷேகம் நடத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாக துணை ஆணையர்ஜெயராமன் கூறியுள்ளார். வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை இந்த அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு அபிஷேகத்தால் பக்தர்கள் தரிசனம் பாதிக்கப்படாது. அனுபவமிக்கவர்களைக் கொண்டு ஆகம விதிப்படி தக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications