திமுகவிலிருந்து மதுராந்தகம் ஆறுமுகம் விலகல்: அதிமுகவில் இணைந்தார்
சென்னை:
திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரான மதுராந்தகம் ஆறுமுகம் இன்று அக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.
மதுராந்தகத்தார் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் திமுகவின் மிக மூத்த உறுப்பினர். செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராகவும்,திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும், 3 முறை எம்.எல்.ஏவாகவும் இருந்தவர்.
கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்த ஆறுமுகம், பின்னர் வைகோ திமுகவிலிருந்து விலகியபோது, அவருடன் மதிமுகவில்இணைந்தார்.
பின்னர் வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விலகி மீண்டும் திமுகவில் சேர்ந்தார். ஆனாலும் அவருக்குதிமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவரை ஒதுக்கியே வைத்திருந்தனர்.
இதனால் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். இந் நிலையில் இன்று சென்னையில் ஜெயலலிதாமுன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் மதுராந்தகம் ஆறுமுகம்.
அவரை வரவேற்ற ஜெயலலிதா, உறுப்பினர் அட்டையை ஆறுமுகத்திடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆறுமுகம்பேசுகையில்,
திமுகவில் குடும்ப அரசியல் அதிகரித்து விட்டது. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்குத்தான் அங்கு மரியாதை.முக்கியத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது. அவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள்.
அதனால்தான் திமுகவிலிருந்து விலகியுள்ளேன். முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரது தலைமையின்கீழ் செயல்பட முடிவு செய்துள்ளேன் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications