வாசன் மீது மகளிர் காங். தலைவி புகார்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக தமிழக மகளிர் காங்கிரஸ்தலைவி டாக்டர் காயத்ரி தேவி புகார் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி மாநிலமகளிர் காங்கிரஸ் தலைவியாக நான் நியமிக்கப்பட்டேன். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவரை(ஜி.கே.வாசன்) அடுத்த நாளே சந்தித்து ஆதரவு கேட்டேன்.
ஆனால் என்னை அவர் கண்டுகொள்ளவில்லை, எனக்குரிய அறையையும் ஒதுக்கவில்லை. 10 நாட்கள் அலையவிட்டு, தவிக்க விட்ட பிறகே அறை ஒதுக்கப்பட்டது.
சோனியா காந்தியால் நியமிக்கப்படும் யாரையும் காங்கிரஸ் தலைவர் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.சோனியாவுக்கு விசுவாசமாக யார் இருந்தாலும் அது வாசனுக்குப் பிடிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி விமலா கணேசன் தலைமையில் சிலர் சத்தியமூர்த்திபவனில் கூட்டம் நடத்தவிருப்பதாக எனக்குத் தகவல் வந்தது. இதையடுத்து நான் வாசனை சந்தித்துப் பேசியபோதுஅவர் சரியாக பதில் கூறவில்லை.
நானே தலைவர் பதவியில் நீடிப்பேனா, இல்லையா என்பது உறுதியாக இல்லை என்று குதர்க்கமாக பதிலளித்தார்.வாசனின் தூண்டுதலின் பேரில்தான் விமலா கணேசன் தலைமையில் மகிளா காங்கிரஸைச் சேர்ந்த சிலர் கூட்டம்போட்டுள்ளனர்.
அகில இந்தியத் தலைமையிடமிருந்து வரும் பேக்ஸ் செய்திகள் எனக்கு சரியாக வருவதில்லை. விரைவில்சோனியா காந்தியை சந்தித்து வாசனின் செயல்பாடுகள் குறித்து புகார் கூறவுள்ளேன் என்றார் காயத்ரி தேவி.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications