வேகமாய் உருகும் இமயமலை பனி: வெள்ளம்-வறட்சி அபாயம்!
ஜெனிவா:
உலகின் வெப்பம் உயர்ந்து வருவதால், இமயமலை பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதாக சுற்றுச் சூழல்மற்றும் காலநிலைக்கான ஆராய்ச்சிக்கான உலக நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளை நம்பியிருக்கும் இந்தியா, சீனா, நேபாளத்தைச் சேர்ந்தகோடிக்கணக்கான மக்கள் வெள்ளம் மற்றும் அதைத் தொடர்ந்து கடும் வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகவாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
லண்டில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டில் பேசிய உலக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆராய்ச்சி நிதியத்திற்கானஇயக்குனர் ஜெனிபர் மோர்கன் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், உலகில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால் ஆர்க்டிக் பகுதியைப் போல இமயமலையும்வேகமாக உருகி வருகிறது. ஆர்க்டிக் பகுதியான அண்டார்டிகாவில் வருடத்திற்கு 33 அடி பனி உருகி வருகிறது.
இதே போன்ற பனி உருகல் இமயமலைப் பகுதியிலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் இங்கிருந்து உற்பத்தியாகும்ஆறுகளான கங்கா, பிரம்மபுத்திரா உட்பட பல ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
இதைத் தொடர்ந்து இந்த ஆறுகள் வறண்டுவிடவும், இதனால் இந்தியா, சீனா மற்றும் நேபாளத்தில் கடும் குடிநீர்த்தட்டுப்பாடும் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் இந்த நாடுகளிலுள்ள பல கோடி மக்கள்பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications