2 வழக்குகளில் சரணடைந்து முன் ஜாமீன் பெற்ற ஜெயேந்திரர்
காஞ்சிபுரம் :
திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு, ரவி சுப்பிரமணியம் மிரட்டப்பட்ட வழக்கு ஆகியவற்றில் காஞ்சிபுரம்நீதிமன்றங்களில் ஜெயேந்திரர் இன்று சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.
இந்த இரு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்திருந்தார். அதைவிசாரித்த உயர்நீதிமன்றம், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று கலவையிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வந்தார் ஜெயேந்திரர். முதலில், திருக்கோட்டியூர் மாதவன்வழக்கில், காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்று சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது சார்பில் சங்கர மட பக்தர்கள் இருவர் தலா ரூ. 25,000 ஜாமீன் அளித்தனர். அதை ஏற்ற நீதிபதிஉத்தமராஜன், ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கினார்.
சனிக்கிழமைதோறும் காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நிபந்தனைவிதிக்கப்பட்டது.
இரண்டாவது வழக்கு:
இதைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியத்தை சங்கர மடத்தின் வழக்கறிஞர்களை வைத்து சிறைக்குச் சென்று மிரட்டியதாகப்பதிவாகியுள்ள வழக்கில், 2வது குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்று சரணடைந்தார்.
அப்போது அவருக்காக சங்கர மட பக்தர்கள் பாலாஜி, சுதர்சன் ஆகியோர் ரொக்கப் பணம் கட்டி ஜாமீன் அளித்தனர். அதை ஏற்றநீதிபதி, ஜெயேந்திரருக்கு ஜாமீன் அளித்தார்.
சனிக்கிழமைதோறும் சிவ காஞ்சி காவல் நிலையத்தில் ஜெயேந்திரர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications