ஜார்க்கண்ட்: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு, சபாநாயகர் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி:

ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் அர்ஜூன் முண்டா தலைமையிலான பாஜக-ஐக்கிய ஜனதா தள அரசு நாளை நம்பிக்கைவாக்கெடுப்பு கோரவுள்ள நிலையில், சபாநாயகருக்கான தேர்தலும் நாளையே நடக்கவுள்ளது.

சபாநாயகர் பதவிக்கு பாஜக-ஐக்கிய ஜனதா தளம் சார்பில் இந்தர்சிங் நாமாதாரி நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் சபாநாயகரானஇவர் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தவைவராவார்.

இவரை எதிர்த்து ஜார்க்கண்ட் முக்தி மோச்சா- காங்கிரஸ் கூட்டணி சார்பில் அன்னபூர்ணா தேவி நிறுத்தப்படுகிறார். இவர்லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்.

இரு அணிகளின் வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்கின்றனர்.

முன்னதாக நாம்தாரியை ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யலாம் என பாஜக விடுத்த கோரிக்கையை ஏற்க ஜார்க்கண்ட்முக்தி மோச்சார் மறுத்துவிட்டது.

81 பேர் கொண்ட சட்டசபையில் பாஜக-ஐக்கிய ஜனதா தளத்துக்கு 41 பேரின் ஆதரவு உள்ளது. இதில் 5 சுயேச்சைகளும் அடக்கம்.

இந்த 41 பேரில் ஒருவரை சபாநாயகராக்கிவிட்டால், இரு அணிகளிடமும் தலா 40 எம்எல்ஏக்கள் இருப்பர்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற மேலும் ஒரு எம்எல்ஏவின் ஆதரவு இரு அணிகளுக்கும் தேவை. இதனால்இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமலேஷ் சிங்கை தங்கள் பக்கம் இழுக்க இரு தரப்பினரும் முயன்றுவருகின்றனர்.

இக் கட்சியின் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், கமலேஷ் தனித்து செயல்பட்டுவருகிறார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இவர் யாருக்கும் வாக்களிக்காமல் போனாலும் அது பாஜகஅணிக்கு உதவிகரமாக இருக்கும்.

இரு அணிகளும் சரிசமமான வாக்குகளை வென்றால், சபாநாயகர் தனது வாக்கை அளித்த வெற்றி தோல்வியை நிர்ணயிப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+