சுனாமி நிவாரணத்தில் அரசியல்: திமுக குற்றச்சாட்டு
திண்டுக்கல்:
சுனாமி நிவாரணப் பணிகளில் தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று குற்றம்சாட்டி திமுக மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நடந்த திமுக மாநாட்டில் 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:
சுனாமி நிவாரணப் பணிகளில் அதிமுக அரசு அரசியலாக்கியுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்கள், ஆளுங்கட்சியைச்சார்ந்தவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.
நிவாரணக் குழுக்கள் முறையாக அமைக்கப்படவில்லை. இந்தக் குழுக்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன. நிவாரணஉதவிகள் மீனவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் முழுமையாக சென்றடைய இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிடவேண்டும்.
மீனவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 1,000 லிட்டர் மானிய டீசலை 5,000 லிட்டராக அதிகரிக்க வேண்டும்.
காவிரி நடுவர் ஆணையத்தின் இறுதித் தீரப்பை விரைவில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாகநீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியார் அணையில் கூடுதல் நீரை சேமித்து வைக்க கேரள அரசின் ஒப்புதலை விரைவில் பெற்று மத்திய நீர் வளத்துறைஆணையம் உதவிட வேண்டும்.
ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற மத்திய தேர்தல் ஆணையம் ஆவனசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications