தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துவிட்டன: ஜெ
சென்னை:
வீரப்பனை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்து பேசுகையில்,காவல்துறையினரின் சிறப்பான கண்காணிப்பு மற்றும் உஷார் நிலை காரணமாக தமிழகத்தில் பொது இடங்களானதிரையரங்குகள், பேருந்து நிறுத்தங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் குற்றம் இழைப்போர்வெகுவாக குறைந்து விட்டனர்.
பெண்களை பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்துவோர் குறித்த வழக்குகளைப் பொருத்தவரை கடந்த 2003ம்ஆண்டை விட 2004ம் ஆண்டில் அதிகளவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகளும் அதிக அளவில்பதிவு செய்யப்பட்டுள்ளன.
காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் ரூ. 18.12 கோடி செலவில் 151 காவல்
நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் பதினான்கு இடங்களில் 49 காவல் நிலையங்களுக்கானகட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
ரூ. 3 கோடி மதிப்பில் 25 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 15 காவல்நிலையங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
1992ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் தீரமிக்க நடவடிக்கையின் காரணமாககொலைகாரனும், வழிப்பறிக் கொள்ளையனுமான வீரப்பன் கொல்லப்பட்டான்.
சிறப்பு அதிரடிப்படையினருக்கு அளிக்கப்பட்ட முக்கியப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்ட போதிலும்,உயிரின வாழ்க்கைச் சூழல் மற்றும் வனச் சூழலை மேம்படுத்தவும், வனங்கள் தீவிரவாதிகளின் புகலிடமாகமாறுவதைத் தடுக்கவும், பல்வேறு பதவி நிலையில் உள்ள 242 பணியாளர்களுடன் இப்படை தொடர்ந்து இயங்கஉத்தரவிட்டுள்ளேன்.
வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் காவலர்கள் தங்குவதற்காக ரூ. 67.3 லட்சம் மதிப்பில் ஜாபர் சாரங்தெருவில் விருந்தினர் அறைகள்; பெண் காவலர்கள் தங்குவதற்காக ஐசக் தெருவில் ரூ. 62.2 லட்சம் மதிப்பில்விருந்தினர் அறைகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications