சுனாமியால் இணைந்த 12 உள்ளங்கள்
கடலூர்:
சுனாமிக்கு தங்களது குடும்பங்களை பலி கொடுத்த இருவர் மறுமணம் செய்து கொண்டனர். இவர்கள் தவிர சுனாமியால்பாதிக்கப்பட்ட மேலும் 10 ஜோடிகளும் திருமணம் செய்து கொண்டனர்.
சுனாமி பாதித்த கடலூர், நாகை மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. சுனாமி சமயத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்த பலதிருமங்கள் தள்ளி வைக்கப்பட்டு, தற்போது அரசின் உதவியால் மொத்தமாக இத் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள முடசல்ஓடை கிராமத்தைச் சேர்ந்த 12 ஜோடிகளின் திருமணம்சிதம்பரத்தில் நடந்தது. இதில் இருவர் சுனாமிக்கு தங்களது குடும்பங்களை மொத்தமாக பலி கொடுத்தவர்கள் ஆவர்.
நடு முடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்த அப்பாராஜ் என்பவர் சுனாமிக்கு தனது மனைவி, இரு மகள்களை பலி கொடுத்தார்.அவரும், நான்கு மகன்களும் மட்டும் உயிர் தப்பினர்.
இந் நிலையில் மறுமணம் செய்து கொள்ளுமாறு அப்பாராஜை உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர். அதை ஏற்ற அப்பாராஜ், வடக்குமுடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்த சந்திரகலா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டார். இவர் சுனாமிக்கு தனதுகுடும்பத்தையே பலி கொடுத்துவிட்டு அநாதரவானவர்.
இவர்களது திருமணம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. தங்களது தந்தையின் திருமணத்தைக்காண மகன்களான மோகன், நடராஜ், விஜயராஜ், புஷ்பராஜ் ஆகியோர் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
இதேபோல, எம்.ஜி.ஆர். திட்டு பகுதியைச் சேர்ந்த செண்பகமூத்தி என்பவர், மல்லிகா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.செண்பகமூர்த்தியின் மனைவி சிந்தாமணி டிசம்பர் 26ம் தேதி சுனாமிக்குப் பலியானார். அவர்களுக்கு அனிதா என்ற 10 வயதுமகள் மட்டுமே உள்ளார்.
இதுதவிர மேலும் 10 திருமணங்களும் நடந்தன. சிதம்பரம் துணை கலெக்டர் ராஜேந்திர ரத்னூர் இத் திருமணங்களை நடத்திவைத்தார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications