திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் வெளியேற்றம்
சென்னை:
தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்றும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏக்கள் பல்வேறு காரணங்களைக் காட்டிவெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்றும் திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுனில்குமாரை, மு.க.ஸ்டாலின் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து இன்றுவிவாதம் நடந்தது. அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா,
ஸ்டாலின் மீது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி புகார் கூறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஸ்டாலின்முன்னாள் முதல்வரின் மகன், மத்திய அரசிலும் அவர்களுக்கு செல்வாக்கு உள்ளது, புகார் கொடுத்தால் தனக்கு பாதிப்புஏற்படலாம் என்பதால் அவர் புகார் கொடுக்காமல் இருந்திருக்கலாம்.
2001ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த ஐ.பி.எஸ்.அதிகாரிகளை வட கிழக்கு மாநில எல்லைப் பகுதிகளுக்கு பணிக்கு அனுப்பியது திமுக. எனவே காவல்துறை அதிகாரிகளைஅவமதிப்பதும், தாக்குவதும் திமுகவுக்குப் புதிதல்ல.
திமுக தலைவர் கருணாநிதியைக் கைது செய்ய சென்றபோது உயர் போலீஸ் அதிகாரியான முகம்மது அலியை, முரசொலி மாறன்தாக்கினார். கருணாநிதியை அரசினர் தோட்டத்தில் வைத்து போலீஸார் விசாரிக்க முயன்றபோது நுழைவாயில் கேட்டை காரால்தாக்கி உடைத்து, காவலர்களைக் கொல்ல முயன்றார் டி.ஆர்.பாலு.
எப்போதெல்லாம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முயலுகிறார்கேளா, அப்போதெல்லாம் அவர்களைத் திட்டித் தீர்ப்பதும்,தாக்குவதும் திமுகவினருக்கு வாடிக்கை.
ஆனால் அதிமுக ஆட்சியில் காவல்துறைக்கு உரிய மரியாதை, சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின்போது என்மீதும், அதிமுக அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள், எங்களுக்கு எதிராக பொய் சாட்சி சொலலியஅதிகாரிகள் ஆகியோரை பழிவாங்காமல் அவர்களுக்கு இந்த ஆட்சியில் நல்ல பதவிகள் கொடுத்துள்ளோம் என்றார்ஜெயலலிதா.
அப்போது துரைமுருகன் எழுந்து கூறினார். அவர் பேசியது அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார் சபாநாயகர்காளிமுத்து. இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோரை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.இதையடுத்து இருவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் விவாதம் தொடர்ந்தது.
அப்போது ஆற்காடு வீராசாமியும், ஸ்டாலினும் எழுந்து மீண்டும் பிரச்சினையை எழுப்பினர். இதற்கு காளிமுத்து அனுமதிஅளிக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் பேச முயலவே திமுகவினர் அனைவரையும் வெளியேற்றுமாறு சபாநாயகர்உத்தரவிட்டார்.
திமுக உறுப்பினர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சபாநாயகரை பார்த்து கடுமையான வார்த்தை ஒன்றைப் பிரயோகம் செய்தார்.இதற்கு ஆளுங்கட்சித் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சாமிநாதனை இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொள்ளத் தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.அப்போது பாமக, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதை ஏற்ற சபாநாயகர், அதை 5 நாள் தடையாகக் குறைத்தார்.
அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் சாமிநாதனுக்கு எச்சரிக்கையுடன் ஒரு நாள் தடை மட்டும் விதித்தால்போதுமானது என்று யோசனை தெரிவித்தார். இதை ஏற்ற காளித்து, 5 நாள் தடையை இன்று ஒரு நாள் மட்டும் கூட்டத்தில்கலந்துகொள்ள தடை விதிப்பதாக மாற்றினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications