சட்டசபையில் கையெழுத்து போட்ட கருணாநிதி
சென்னை:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபைக்கு வந்த கருணாநிதி, இன்றும் அவைக்குள் வராமல் கையெழுத்து மட்டும்போட்டு விட்டுச் சென்றார்.
சேப்பாக்கம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில்பங்கேற்பதில்லை. பதவி பறி போய் விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது சட்டசபை வளாகம் வரை வந்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்கிறார்.
அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று அவர் சட்டசபை வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள வருகைப் பதிவேட்டில்அவர் கையெழுத்திட்டார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் அறைக்குச் சென்ற அவர் அங்கு காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் தலைவர் ஹேமச்சந்திரன்உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கருணாநிதியை நிருபர்கள் சந்தித்து, சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள்தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு, சட்டசபையின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு இதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்கருணாநிதி.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications