சென்னை- மதுரைக்கு ரயில் பாதை மின்மயமாகிறது
சென்னை:
சென்னையிலிருந்து மதுரை வரையிலான ரயில் பாதையை மின்மயமாக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
தமிழகத்திலேயே மிக நீண்ட ரயில் பாதையாக சென்னை முதல் நாகர்கோவில் வரையிலான ரயில் பாதை திகழ்கிறது. இந்த ரயில்பாதையில்தான் அதிக ரயில்களும், அதிக பயணிகளும் சென்று வருகிறார்கள்.
இந்த மார்க்கத்தில், தற்போது சென்னையிலிருந்து விழுப்புரம் வரையிலான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுவிழுப்புரத்திலிருந்து மதுரை வரையிலான ரயில் பாதையையும் மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, விழுப்புரம் முதல் திருச்சி வரையிலும், 2வது கட்டமாக திருச்சி முதல் மதுரை வரையிலும் மின் மயமாக்கல்பணிகள் மேற்கொள்ளப்படும். விழுப்புரம் முதல் மதுரை வரையிலான ரயில் பாதையை மின்மயமாக்க ரூ. 158 கோடி செலவாகும்என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே மின்மயமாக்கல் பிரிவுக்கு தென்னக ரயில்வேயிருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி:
மதுரையில் அரசு பல் மருத்துவக் கல்லூயை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டும்தான் அரசு பல் மருத்துவக் கல்லூ உள்ளது. இதுதவிர சில தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன.
இந் நிலையில் மதுரையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியை நிறுவ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை பாலரங்காபுரத்தில்பல் மருத்துவக் கல்லூரியை அமைக்க மதுரை மருத்துவக் கல்லூரி பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இடவசதி போதாது என்றுஅதை இந்திய பல் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நிராகத்து விட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது தோப்பூரில் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதுதொடர்பான விரிவான விவர அறிக்கை இந்தியபல் மருத்துவ கல்வி இயக்குனகரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் கலாவதி கூறுகையில், மதுரையில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இந்தக் கல்லூரி மூலம் தென் மாவட்ட மக்கள் பெரும் பயனடைவார்கள் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications