கமலஹாசனுக்கு திருமாவளவன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் கமலஹாசன் வரும் 26ம் தேதிக்குள் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் அதன் பிறகுஅடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதிய, "வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் என்ற நூல்வெளியீட்டு விழா,விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில்நடந்தது.

தமிழ்தேச இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் முதல் நூலை வெளியிட்டார். மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் க.ப. அறவாணன், மணவை முஸ்தபா உட்பட பல தமிழ் அறிஞர்கள்இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொள்ள வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்றபெயரில் நான் சினிமாவை மட்டும் குறிவைத்து தாக்குவதாக எல்லோரும் கருதுகின்றனர்.

அது தவறான கருத்தாகும். எங்கள் இயக்கம் சார்பில் 10 துறைகளில் தமிழை பாதுகாக்க கோரிக்கைவைத்துள்ளோம். அதில் ஒன்று ஊடகம். ஊடகம் என்றால் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சினிமாஎல்லாம் அடங்கும்.

திரைப்படம் வெகுவிரைவாக மக்களை சென்றடைவதால் அது தொடர்பான எங்களது கோரிக்கை மட்டும்பெரிதுபடுத்தப்படுகிறது.

இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா தனது படத்தின் பெயரை மாற்றுவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று அவர் பெயரை மாற்றுவதாக அவர் சொல்லாவிட்டாலும், எங்கள்இயக்கத்தின் தமிழ் உணர்வை மதித்து பெயரை மாற்றியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கமலஹாசனின், "மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரையும் மாற்றுமாறு நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம்.வருகிற 26ம் தேதிக்குள் அவர் தனது படத்தின் பெயரை மாற்றவேண்டும்.

இல்லாவிட்டால் அன்றைய தினம் திருச்சியில் நடைபெற உள்ள மூன்றாவது மொழிப்போர் மாநாட்டிற்குப் பிறகோ,அல்லது மாநாட்டிலோ அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+