அழகிரி மீதான திருட்டு விசிடி வழக்கு ஒத்திவைப்பு
மதுரை:
திருட்டு வீடியோ வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மதுரைநீதிமன்றம் மே மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
திமுக ஆட்சியில் இருந்தபோது தென் மாவட்டங்களில் அதிகாரம் செலுத்தி வந்தார் அழகிரி.
அண்ணன், தளபதி, வருங்கால முதல்வர் என்று அவரது ஆதரவாளர்களால் வாய் நிறைய அழைக்கப்பட்ட அழகிரி அரசுநிர்வாகத்திலும் ரொம்பவே தலையிட்டார். திமுகவிலும் கோஷ்டி அரசியல் நடத்தி வந்தார்.
இந்த கோஷ்டி மோதல்கள் தீவிரமாக இருந்த நிலையில் தா.கிருட்டிணன் கொலையானார்.
ஓவராய் ஆடிய அழகிரியின் ஆட்டம் இந்தக் கொலைக்குப் பின் அடங்கியது. இந்தக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டதோடு, அழகிரி நடத்தி வந்த வீடியோ கடையிலும் சோதனை நடந்தது.
திருட்டு விசிடிக்களை வைத்திருந்ததாக இன்னொரு வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் அவருடன் மேலாளர் தாமோதரனும்கைது செய்யப்பட்டார்.
இருவரும் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த திருட்டு விசிடி மதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மதுரை விரைவு நீதிமன்றத்தில் அழகிரி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நீதிபதி வெங்கடசாமி இன்று விசாரித்து மேற்கொண்டு விசாரணையை மே 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கொஞ்ச நாளாய் அடங்கியிருந்த அழகிரி இப்போது மீண்டும் திமுகவில் தனது கோஷ்டிக்கு உயிர் கொடுத்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications