தந்தையிடமிருந்து மீட்கப்பட்டு தாயிடம் சேர்க்கப்பட்ட குழந்தை
சென்னை:
தந்தையால் எடுத்துச் செல்லப்பட்ட பெண் குழந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையின் காரணமாக தாயிடம் சேர்க்கப்பட்டது.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் அமீருன்னிஷா. இவரும் சண்முக சீனிவாசன் என்பவரும் கடந்த 2003ம் ஆண்டு மார்ச் 6ம்தேதி, இரு வீட்டாரின் எதிர்ப்புகளை மீறி ராயப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பின் அமீருன்னிஷா தனது தாயாரை சமாதானப்படுத்தினார். மனம் மாறிய அவரது தாயார் சண்முகத்தை மீண்டும்இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வலியுறுத்தினார். இதையடுத்து 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி இருவரும் இஸ்லாமியமுறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு சீனிவாசன், சீனி முகம்மது என பெயரை மாற்றிக் கொண்டார். செப்டம்பர் 28ம் தேதி விமரிசையாக திருமணவரவேற்பையும் அமீருன்னிஷாவின் தாயார் நடத்தினார்.
திருமணத்திற்குப் பிறகு வரதட்சணையாக 50 பவுன் நகை, வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அமீருன்னிஷாவின்தாயார் வாங்கித் தந்தார்.
இதையடுத்து தனது சூளைமேடு வீட்டுக்கு அமீருன்னிஷாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார் சீனிவாசன்.
கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் அமீருன்னிஷாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
மருத்துவமனையிலிருந்து கணவர் வீட்டுக்குத் திரும்பினார் அமீருன்னிஷா. அதன் பிறகு சீனிவாசனின் செயல்பாடுகளில் பெரும் மாற்றம்தெரிவதைக் கண்ட அமீருன்னிஷா அவரிடம் விசாரித்துள்ளார். ஆனால் சீனிவாசன் சரியாக பதில் சொல்லவில்லை எனத் தெரிகிறது.
இந் நிலையில்தான் தனது நகைகள் அனைத்தையும் சீனிவாசன் விற்று விட்டது அமீரூன்னிஷாவிற்குத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து கேள்வி கேட்ட அமீருன்னிசாவை சீனிவாசனும், அவரது தாயாரும் சேர்ந்து தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர். இந் நிலையில்கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி வீட்டிலிருந்த ரூ. 25,000 பணம், மற்றும் இரட்டைக் குழந்தைகளில் (பர்வீனா) ஒன்றை எடுத்துக் கொண்டுவீட்டை விட்டுக் கிளம்பியுள்ளார் சீனிவாசன்.
அவர் எங்கு போனார் என்பது தெரியாததால், அதிர்ந்து போன அமீருன்னிஷா அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது குழந்தையைக் கண்டுபிடித்துத் தரக்கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுவையும்தாக்கல் செய்தார்.
குழந்தையை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸார் விசாரித்தபோது சீனிவாசனும்,அவரது தாயாரும் நாக்பூல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சென்னைக்குக் கொண்டு வந்தனர் போலீஸார். குழந்தையை மீட்டு உயர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
குழந்தையை அமீருன்னிஷாவிடம் ஒப்படைக்க நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது அமீருன்னிசாவுக்கும் கணவர் சீனிவாசனுக்கும் இடையே நீதிமன்றத்தில் வாக்குவாதம் நடந்தது.அப்போது அவர்களை அமைதிப்படுத்த முயன்ற வழக்கறிஞர்களை நீதிபதி கற்பக விநாயகம் தடுத்தார்.
இது கணவன், மனைவி பிரச்சனை. அவர்கள் சண்டை போடட்டும். யாரும் தடுக்காதீர்கள், சண்டை போட்டால் இந்த விவகாரத்தில் முடிவுகிடைக்கும் என்றார் நீதிபதி.
மேலும் வாரம் ஒருமுறை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை தனது குழந்தையை, அமீருன்னிஷாவின் வீட்டிற்குச் சென்றுபார்க்கவும் கணவர் சீனிவாசனுக்கு அனுமதி அளித்தார் நீதிபதி கற்பகவிநாயகம்.
இதன்மூலம் கணவன், மனைவி சந்திக்கவும், குழந்தைகளை மையமாக வைத்து இருவரும் மீண்டும் இணையவும் வாய்ப்பு ஏற்படுத்தித்தந்துள்ளார்.
தண்டனை என்பதை மனிதர்களைத் திருத்த வேண்டும் என்ற அணுகுமுறையில் வழக்குகளைக் கையாளும் நீதிபதி கற்பகவிநாயகம், தனதுவித்தியாசமான தீர்ப்புகளால் பலரையும் கவர்ந்தவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications