உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு இன்று காலை மர்மத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் தனது பெயர் பாஷா என்று கூறிக் கொண்டார்.
அவர் பேசுகையில், உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் அவை வெடிக்கலாம் என்று கூறி விட்டுதொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையரிடம் உயர் நீதிமன்றப் பதிவாளர் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து இணை ஆணையர் சைலேந்திரபாபு தலைமையில்போலீஸ் படை விரைந்து வந்தது. வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களும் வந்தனர்.
உயர் நீதிமன்றம் முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்துவெடிகுண்டுப் புரளியைக் கிளப்பிய நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் புரளி காரணமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.
கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் கைதாகியுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுமீது இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில் வெடிகுண்டு புரளி கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications