"அம்மா" பிரதமராக வேண்டி கத்தியால் குத்தி நேர்த்திக் கடன்!
ஓசூர்:
முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டி, தனது உடலில் கத்தியால் குத்திக் கொண்டு ஒரு அதிமுக தொண்டர் நேர்த்திக் கடன்செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ளது தேன்கனிக்கோட்டை. இங்குள்ள யாரப் தர்ஹாவில், கந்தூரி உரூஸ் விழா நடந்தது.இத் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு 8வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பாசு என்கிற ஜோஷே இஸ்லாம், நீர் மோர்ப் பந்தல்அமைத்து நீர் மோர், குடிநீர் வழங்கி வந்தார்.
மாலையில் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்டுகள் வாழ வேண்டும், இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று கூறிபந்தலுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் திருவிழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்பு, திடீரென கத்தியை எடுத்து தனது மார்பில் பலமுறை குத்திக் கொண்டார்.
இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நேர்ந்து கொண்டதாகவும், அதற்காகவே கத்தியால் குத்திக் கொண்டதாகவும் இஸ்லாம்கூறினார். அவரது செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications