கனிஷ்கா: 2 சீக்கியர்களும் விடுதலை!
வான்கூவர்:
329 பயணிகளைப் பலி வாங்கிய கனிஷ்கா விமான குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டுசீக்கியர்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
1985 ஜூன் 23ம் தேதி, ஏர்-இந்தியாவின் கனிஷ்கா விமானம் கனடாவிலுள்ள டொரண்டோவிலிருந்து மும்பைக்குபுறப்பட்டது. இந்த விமானம் அயர்லாந்து கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் சிதறியது.
இதில் விமானத்தில் இருந்த 329 பயணிகள் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கனடாவில்வாழ்ந்த சீக்கியர்களான ரிபுதமன்சிங் மாலிக் மற்றும் அஜியாப்சிங் பக்ரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 20 வருடங்களாக பெரும் இழுத்தடிப்புடன் கனடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.ஒருவழியாக இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாலிக் மற்றும் பக்ரியை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு சரிவரநிரூபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும்,எனவே இது குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும் விமான விபத்தில் தனது தாயை பறிகொடுத்தசுஷீல் குப்தா என்பவர் தெரிவித்தார்.
இதே கருத்தையே பிற பயணிகளின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பொற்கோவில் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்துவிமானத்தில் குண்டு வைக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
-
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications