மயூரணி வழக்கு: 2 மாதத்தில் முடிக்க உத்தரவு
மதுரை:
இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென மதுரைஉயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகளான மயூரணி, மதுரை அண்ணா நகரில் உள்ள அம்பிகாகலைக் கல்லூயில் படித்து வந்தார். கல்லூரி உரிமையாளரான சோலமலைத் தேவரின் வீட்டிலேயே தங்கியிருந்துஅவர் படித்து வந்தார்.
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி சோலமலைத் தேவரின் வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்மயூரணி. இந்தக் கொலை தொடர்பாக சோலமலைத் தேவர், அவரது மனைவி, மற்றொரு இலங்கை மாணவர் பாலபிரசன்னா உள்ளிட்டோரை மதுரை அண்ணா நகர் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மயூரணியின்சகோதரி சுபந்தினி, தந்தை தியாகராஜன் ஆகியோரை சாட்சிகளாக சேர்க்கக் கோரி, பால பிரசன்னா சார்பில் மதுரைஅமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்றக் கிளையில் பாலபிரசன்னா மேல் முறையீடு செய்தார். மேலும், வழக்கு தொடர்பானஆவணங்களை உயர்நீதிமன்றக் கிளையில் ஒப்படைக்க உத்தரவிடுமாறும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரானவழக்கறிஞர், மயூரணியின் சகோதரியும், தந்தையும் தாங்களாகவே முன்வந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளனர். இதை சாட்சியாக கருதக் கூடாது. அவர்கள் கொடுத்த அறிக்கையை சாட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் உயர்நீதிமன்றக் கிளையில் இருப்பதற்கு அரசுத் தரப்புக்கு ஆட்சேபனை இல்லைஎன்றார்.
இதைக் கேட்ட நீதிபதி சொக்கலிங்கம், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணைநீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், விசாரணையை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும்அவர் உத்தரவிட்டார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications