கூட்டணி ஆட்சி குறித்து கேட்காதீர்கள்: ராமதாஸ் எரிச்சல்!
தர்மபுரி:
கூட்டணி ஆட்சி குறித்து திருப்பித் திருப்பிக் கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ்எரிந்து விழுந்தார்.
தர்மபுரியில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில் தற்போது உள்ள ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் எந்தப் பிளவும் ஏற்படாது. வேண்டுமானால் கூடுதலாக சில கட்சிகள் சேரலாம். கூட்டணியில்திருமாவளவனும் இடம் பெறுவார் என்பதை மனதில் வைத்துத்தான் இதைச் சொல்கிறேன்.
திருமாவளவன் ஐனநாயக முற்போக்குக் கூட்டணியில் சேர வேண்டும் என்பது எனது ஆசை. அவர்விரும்புகிறாரோ, இல்லையோ, எனது விருப்பத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.
வருகிற செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வர பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அதை மனதில்வைத்துத்தான் அரசுத் தரப்பு பல்வேறு காரியங்களில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வருமா என்ற கேள்விக்கு ஏற்கனவே எங்களது கூட்டணியினர் போதுமான அளவுக்குபதில் கூறி விட்டனர். திரும்பத் திரும்ப இதையே ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு வேறு கேள்வி இல்லையா?
தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் அதிக அளவில் பரவியுள்ளது. இதிலிருந்து மீள வேண்டியதின் அவசியத்தைஎடுத்துக் கூறி மக்களை தயார்படுத்தும் பணியை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் செய்து வருகிறது.
திருச்சியில் வருகிற 26ம் தேதி 3வது மொழிப் போர் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தின் நான்குமுனைகளிலிருந்து ஊர்திப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையிலிருந்து நான் மேறகொள்ளும் ஊர்திப்பயணத்தை திமுக தலைவர் கருணாநிதி 22ம் தேதி தொடங்கி வைக்கிறார் என்றார் அவர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications