சபாநாயகர்கள் மாநாடு: காளிமுத்து பங்கேற்கிறார்
சென்னை:
மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூட்டியுள்ள சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சட்டப் பேரவை சபாநாயகர்காளிமுத்துவும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
மார்ச் 20ம் தேதி இந்த மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமையும் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை கடுமையாக கண்டித்து வருகிறார் சோம்நாத்.
இன்று சட்டசபை விவகாரத்தில் தலையிட்டுள்ள நீதிமன்றம், நாளை நாடாளுமன்ற செயல்பாட்டிலும் கூட தலையிடும். இதுஅரசியல் சட்ட சிக்கல்களையே தோற்றுவிக்கும் என்று கூறும் சோம்நாத், நீதித்துறைக்கும் நாடாளுமன்ற-சட்டமன்றங்களுக்கும்உள்ள அதிகார வரம்புகள் குறித்து தெளிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார்.
இது தொடர்பாக விவாதிக்க சபாநாயகர்கள் கூட்டத்தை அவர் கூட்டியுள்ளார்.
ஆனால், இது மத்திய அரசுக்கும்-நீதித்துறைக்கும் இடையே தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கருதும் காங்கிரஸ்இக் கூட்டம் நடத்துவதை ஆதரிக்கவில்லை. அதேபோல ஜார்க்கண்ட் விஷயத்தில் நீதித்துறையின் தலையீட்டையடுத்தேதங்களால் அரசு அமைக்க முடிந்தது என்பதால் பாஜகவும் இக் கூட்டத்தை ஆதரிக்கவில்லை.
இதையடுத்து ஜார்க்கண்ட் விவகாரம் குறித்தோ, அரசியல் பேசவோ நான் இக் கூட்டத்தைக் கூட்டவில்லை என்றுவிளக்கமளித்துள்ள சோம்நாத் சாட்டர்ஜி, இது பொதுவான அதிகார வரம்புகள் குறித்து விவாதிக்கவே கூட்டப்பட்டுள்ளது என்றுகூறியுள்ளார்.
இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநில சபாநாயகர்களுக்கும் சோம்நாத்தே தனிப்பட்ட முறையில் கடிதம்அனுப்பியுள்ளார். காளிமுத்துவுக்கும் இந்த அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து இக் கூட்டத்தில் காளிமுத்து கலந்து கொள்ளக் கூடும் என்று தெரிகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications