தர்மபுரி: மாணவிகள் எரிக்கப்பட்ட பஸ்- நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் அதிமுகவினரால் எரிக்கப்பட்ட வழக்கில் தீக்கிரையான பஸ், சேலம்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதை நீதிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவுக்குதண்டனை வழங்கப்பட்டது. இதைக் கண்டித்து அதிமுகவினர் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் தர்மபுரி அருகே கோவைவேளாண்மைப் பல்கலைக்கழக மாணவியரின் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் பஸ்சுக்குள் இருப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் கொலை வெறியுடன் அந்தக் கும்பல் தீ வைத்தது.

இதில் 3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர். பஸ்ஸை எரித்தது அதிமுகவினர் என்பதால் அவர்களை காக்கிகள்கண்டுகொள்ளவில்லை. வழக்கை ஏனோதானே என்று நடத்தினர். இதனால் கரைவேட்டிகளும் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகுறித்து கவலையின்றி சுற்றி வந்தன.

இதையடுத்து எரிக்கப்பட்ட மாணவி கோகிலவாணியின் தந்தை உயர் நீதிமன்றத்தை அணுக, நீதிபதியின் கடும் கண்டனத்துக்குப்பின் வழக்கு விசாரணை துரிதமானது. வழக்கையும் சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர் நீதிமன்றம் விசாரணையை முதலில்இருந்து நடத்த உத்தரவிட்டது. வழக்கு சிபிசிஐடி வசம் போனது.

இந்நிலையில் எரிக்கப்பட்ட பஸ்ஸை சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று சிறப்பு அரசு வக்கீல் சீனிவாசன் கேட்டுக்கொண்டார். அவர் மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா, தீக்கிரையான பஸ்ஸை சேலம் நீதிமன்றத்தில்ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மீட்புவாகனம் மூலம் சேலம் கொண்டு வந்தனர்.

சேலம் நீதிமன்றத்தில் பஸ் ஒப்படைக்கப்பட்டது. இந்த பஸ்ஸை நீதிபதி கிருஷ்ணராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுவாக எந்த வழக்கிலும் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் வாகனங்களை நீதிபதி பார்வையிடுவதில்லை. இந்த வழக்குமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் நீதிபதி நேரடியாக பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+