கைதியை தப்ப விட்ட 3 போலீசார் கைது
விருதுநகர்:
பணியில் அலட்சியமாக இருந்து கைதியைத் தப்பவிட்ட 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் மணி என்ற குமரன். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் நேற்று பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்காக விவேகானந்தன், ராஜா, சாம்ராஜ் ஆகிய போலீசார் மணியை பஸ்சில் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் பஸ்சில் மணியை வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.
வழியில் விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி என்ற இடத்தில் டீ அருந்த பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அப்போது கைதிமணியும் சிறுநீர் வருவதாகக் கூறி கீழே இறங்கினார்.
அவரை போலீசார் பஸ்சிலிருந்து கீழே இறங்க அனுமதித்தனர்.
இந் நிலையில் திடீரென மணி தப்பியோட ஆரம்பித்தார். இதையடுத்து போலீசார் அவனை விரட்டிக் கொண்டு ஓடினர். ஆனால்,மணி மின்னல் வேகத்தில் பறக்கவே, அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் போலீசார்.
குண்டு ஒரு பக்கமும் மணி வேறு பக்கமுமாக பாய, தப்பிவிட்டான் மணி.
இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி விவேகானந்தன், சாம்ராஜ், ராஜா ஆகிய மூன்று போலீசாரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications