மதிமுக மாநாட்டை தொடங்கி வைக்கும் கருணாநிதி
பாபநாசம்:
எனது கையை வெட்டினால் கட்சி வளரும் என்றால் அதற்கும் தயாராக இருக்கிறேன் என்று வைகோ ஆவேசத்துடன் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மதிமுக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோபேசுகையில், எனது கழகத்திலுள்ள தொண்டர்கள் என்னைப் பார்க்க வேண்டுமானால் சென்னைக்கு வந்து கால் கடுக்க காத்திருக்கவேண்டியதில்லை.
அவர்களை அவரது இல்லங்களுக்கு நேரடியாக வந்து சந்திப்பேன். நான் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது எனக்கு யாரும்மாலைகளோ, சால்வைகளோ அணிவிக்க வேண்டாம்.
என்னை பயங்கரவாதி என்று தமிழக அரசு பொடா சட்டத்தில் கைது செய்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில்ஜெயலலிதாவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டினார்கள்.
கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டதை பொறுக்க முடியாத ஜெயலலிதா, சென்னைக்குள் என்னை நுழையமுடியாமல் தடுக்க நினைத்தார். அதை முறியடித்து வெற்றி கண்டோம்.
கட்சி வளர்ச்சிக்காக எதையும் செய்யத் தயாராக உள்ளேன். எனது கையை வெட்டினால் கட்சி வளரும் என்றால் அதை செய்யவும்தயாாக இருக்கிறேன்.
வருகின்ற சட்டசபை தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலைப் போல திமுக கூட்டணி வெற்றி பெற்று திமுக தலைவர் கருணாநிதிமுதல்வராக அமருவார்.
தஞ்சையில் ஏப்ரல் 24ம் தேதி மதிமுக வின் திறந்த வெளி மாநாடு நடைபெறுகிறது. இதை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கிவைப்பார் என்றார்.


Click it and Unblock the Notifications
