கோவில்களை புறக்கணிக்கும் தமிழக அரசு: பாஜக பாய்ச்சல்
நாகர்கோவில்:
தமிழகத்தில் இந்துக் கோவில்கழை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக என பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் இந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ராஜாபேசுகையில், தமிழகத்தில் உள்ள கோவில் வருமானத்திலிருந்து, மதக் காரியங்களுக்காக அரசு கொடுக்கும் தொகை ரூ. 1.92கோடி மட்டும் தான்.
ஆனால் அதிகாரிகளுக்கு ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ. 23.87 கோடியை அரசு எடுத்துக் கொள்கிறது.
2004ம் ஆண்டில் ரூ. 44 கோடியில் பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இதில் அரசு மானியம்வெறும் ரூ. 75 லட்சம்தான். மற்ற பணத்தை கோவில் வருவாயிலிருந்தே எடுத்து செலவிட்டுள்ளனர்.
இந்துக் கோவில்களை இந்துக்களிடமே அரசு கொடுத்து விட்டு வெளியேற வேண்டும். அப்போதுதான் இந்துக் கோவில்களைசிறப்பாக பராமரிக்க முடியும்.
மதுரையில் 200க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை, ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் இடித்துத்தள்ளியுள்ளனர். முதலில் அந்தக் கோவில்களை கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராஜா.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications