கிரிக்கெட்: அவமதிப்பு வழக்கு-சிக்கலில் டால்மியா
சென்னை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைவரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், இந்திய கிரிக்கெட்வாரியத்தின் புரவலராகவும் செயல்பட டால்மியாவுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை தி.நகர் கிரிக்கெட் கிளப், சென்னைமுதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உரிமையியல் நீதிமன்றம் டால்மியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால்அவர் ஆஜராகவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்திலும் டால்மியா கலந்துகொண்டார்.
இதையடுத்து டால்மியா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் எஸ்.கே.நாயர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புவழக்கை தி.நகர் கிளப் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என டால்மியாகோரியிருந்தார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் இன்று விசாரணக்கு ஆஜராக வேண்டும் என இருவருக்கும் உத்தரவிட்டிருந்தது. இன்றுமனு விசாரணக்கு வந்தபோது டால்மியா மற்றும் நாயர் இருவரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
டால்மியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த சங்கர் ரே, உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்றவிவரம் டால்மியாவுக்குத் தெரியவில்லை. அதற்கான நோட்டீஸும் அவருக்கு வரவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட தி.நகர் கிளப் வழக்கறிஞர் செல்வராஜ், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதும், நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று டால்மியாவுக்குத் தெரியும். அதனால் தான் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி அவர்மனு செய்திருந்தார் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகைதீன் பிச்சை, வரும் 28ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.அன்றைக்கு இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications