தர்மபுரி பஸ் எரிப்பு: பெட்ரோல் ஊற்றியவனை அடையாளம் காட்டிய பேராசிரியைகள்
சேலம்:
கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பஸ்ஸை அதிமுகவினர் தீ வைத்துக் கொளுத்தி 3 மாணவிகள்உயிருடன் எரிந்து சாம்பலான வழக்கில் இன்று சாட்சிகள் விசாரணை தொடங்கியது.
பல்கலைக்கழக பேராசிரியைகளான லதா மற்றும் அகிலா ஆகியோரிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன் விசாரணைநடத்தினார். அப்போது பஸ் எரிக்கப்பட்ட சம்பவத்தை இருவரும் உருக்கத்துடன் எடுத்துக் கூறினர்.
அப்போது இந்த பஸ் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவினர் உள்ளிட்ட 31 பேரும் நீதிமன்றத்தில்ஆஜராகியிருந்தனர்.
பஸ் மீது பெட்ரோல் ஊற்றியவரை அடையாளம் கூற முடியுமா என வழக்கறிஞர் கேட்டபோது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தரவீந்திரன் என்பவனை பேராசிரியைகள் அடையாளம் காட்டினர்.
இவன் தான் பஸ்சில் மாணவ, மாணவிகள் இருப்பதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் பெட்ரோலை ஊற்றியதாகக்கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா மீதான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அவருக்கு சென்னை தனி நீதிமன்றம் 1 வருடம் சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையில் இறங்கினர். இதில் தர்மபுரி அருகே,கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் வந்த பேருந்தையும் அதிமுகவினர் தீ வைத்துக் கொளுத்தினர். இதில் 3மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.
இந்த வழக்கு முதலில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஆனால், விசாரணை நடந்த விதமும், அதிமுகவினரைகாப்பாற்ற போலீசாரும் அரசுத் தரப்பும் செயல்பட்ட விதமும் உயர் நீதிமன்றத்தின் கோபப் பார்வைக்கு உள்ளாயின.
இதையடுத்து வழக்கை சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அரசுவழக்கறிஞராக நியமிக்கப்பட்ட சீனிவாசனுக்கு உரிய அப்பாயின்மெண்ட் ஆர்டரைத் தராமல் அரசுத் தரப்பு இழுத்தடித்தது. நீண்டஇழுத்தடிப்புக்குப் பின்னரே அவருக்கு அந்த ஆர்டர் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் இந்த வழக்கு சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 31 பேர்மீதும் புதிதாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பேருந்து கடந்த வாரத்தில் நீதிமன்றத்தில்ஒப்படைக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. மொத்தம் உள்ள 386 சாட்சிகளில் 5 பேர் இன்று நீதிபதிகிருஷ்ணராஜா முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன் விசாரணை நடத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications