சட்டசபையில் திமுக, மார்க்சிஸ்ட் வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையிலிருந்து இன்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபை இன்று காலை கூடியதும், சமூகநலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர்விஜயலட்சுமி பழனிச்சாமி பேசினார்.
அப்போது திமுக எம்எல்ஏ துரைமுருகன் எழுந்து, கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூவலூர் ராமாமிர்தம்அம்மையார் பெயரில் இலவச மருத்துவ உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது அதன் நிலை என்ன என்று கேட்டார்.
மேலும் ராமமிர்தம் அம்மையார் பெயரிலான ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்தி விட்டதுஎன்று கூறி அது தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர் திமுக எம்எல்ஏக்கள்.
ஆனால் இதற்கு சபாநாயகர் காளிமுத்து அனுமதி அளிக்கவில்லை.
அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா: அத் திட்டம் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேறு 4 திட்டங்களின் கீழ் இந்தஉதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன என்றார்.
துரைமுருகன்: பெண்கள் முன்னேற்றத்துக்காக மூவலூர் ராமமிர்தம் அம்மையார் பாடுபட்டார். அவரது பெயரில் எங்கள்ஆடசியில் தொடங்கப்பட்ட திட்டத்தை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள். இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
பின்னர் திமுக எம்எல்ஏக்களுடன் அவர் வெளியேறினார்.
அப்போது சபாநாயகர் காளிமுத்து குறுக்கிட்டு, வெளிநடப்பு செய்வதற்காகவே அவைக்கு வருகிறீர்கள் என்றார்.
அப்போது பேசிய ஜெயலலிதா, மூவலூர் ராமமிர்சம் அம்மையாரை நாங்கள் மதிக்காததைப் போல துரைமுருகன் பேசினார். அந்தஅம்மையார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவர்கள் நாங்கள். அந்தப் பெயர் ஒரு திட்டத்துக்கு முக்கியம் அல்ல.திட்டத்தின் பயன்பாடு தான் முக்கியம்.
திமுக ஆட்சியில் ராமமிர்தம் அம்மையார் பெயரில் தொடங்கப்பட்ட திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்தன. இதனால் தான் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.
ஆனால், வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க் கட்சியினர் ஏதாவது காரணம் தேடி, வெளிநடப்பு செய்கின்றனர் என்றார்.
மார்க்சிஸ்ட் வெளிநடப்பு:
நாகை மற்றும் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி குறித்து பேச கவனஈர்ப்புத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்தது.
இதன் மீதும் விவாதம் நடத்த சபாநாயகர் காளிமுத்து அனுமதி அளிக்காததால், அவரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்களும்வெளிநடப்பு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications