முரளீதரன் மதிமலர் திருமணம் நடந்தது
சென்னை:
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கும் சென்னையைச் சேர்ந்த மதிமலருக்கும் இன்றுதிருமணம் நடந்தது.
சென்னை மலர் மருத்துவமனையின் நிறுவனரும் மறைந்த பிரபல மருத்துவருமான டாக்டர் ராமமூர்த்தியின் இளையமகள் தான்மதிமலர்.
இன்று சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் முற்றிலும் தமிழ்முறைப்படி முரளிதரன், மதிமலர் திருமணம் நடந்தது.மங்கல வாத்தியங்கள் முழங்க மதிமலருக்கு மங்கல நாணை முரளீதரன் அணிவித்தார்.
32 வயதான முரளீதரனுக்கும் 24 வயதான மதிமலருக்கும் கடந்த டிசம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இத் திருமணத்திற்குகாரணமாக இருந்தவர் நடிகர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்தது முரளீதரனின் குடும்பம். ஆனால், அவரது மூதாதையர்கள் இலங்கையில்குடியேறிவிட்டனர். முரளீதரன் பிறந்தது கண்டியில்.
இப்போது அவரது குடும்பத்தினர் திருச்சியில் ஹோட்டல் பிஸினசில் ஈடுபட்டுள்ளனர்.
மதிமலர் தனது தாயார் நித்யா ராமமூர்த்திக்குத் துணையாக மலர் மருத்துவமனையின் நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
இவர்களின் திருமணத்தையொட்டி ராணி மெய்யம்மை ஹாலைச் சுற்றி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இத் திருமணநிகழ்ச்சியில் முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜூன ரணதுங்கா, வீரர்களான சனத் ஜெயசூர்யா, சமிந்தா வாஸ், முன்னாள் இந்தியவீரர்களான ராபின் சிங், டி.ஏ.சேகர், ஆஷிஷ் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத் திருமணத்தைக் காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ராணி மெய்யம்மை ஹாலைச் சுற்றி குழுமியிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்கள், திரையுலகைச்சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications