பிரதமர், அத்வானிக்கு சிறந்த எம்பி விருது
காந்திநகர்:
இந்தியாவுக்கு எதிராக தவறான பிரச்சாரம் நடந்து வருவதாக என்று வீடியோ கான்பரன்சிங்மூலம் அமெரிக்காவிலுள்ளஇந்தியர்களிடையே நரேந்திர மோடி பேசினனார்.
அமெரிக்காவிலுள்ள ஆசிய அமெரிக்க ஹோட்டல் அதிபர்கள் கூட்டம் மற்றும் இந்திய- அமெரிக்க கூட்டமைப்பின்பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதாக இருந்தது.
ஆனால், மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க அவருக்கு ஏற்கனவே தரப்பட்ட விசாவையும் ரத்து செய்துவிட்டது. குஜராத்மதக் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா செல்ல இயலாத மோடி டெலிகான்பரன்ஸ் மூலம்நியூஜெர்சியில் கூடிய இந்திய-அமெரிக்கர்கள் இடையே உரையாற்றினார்.
அவர் பேசுகையில், எனக்கு விசா மறுக்கப்பட்டதால் அமெரிக்க அரசின் மீதோ அல்லது அந்நாட்டின் மக்கள் மீதோ எந்தவருத்தமும் இல்லை.
அமெரிக்காவில் வாழும் நீங்கள் இப்பிரச்சினையை ஏற்படுத்தியவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக தவறானப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதை நீங்கள் முறியடிக்க வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் எல்லா வளங்களும் உள்ளன. எனவே நீங்கள் அனைவரும் இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும். இம்மாநிலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியதற்காக உலக வங்கி, ஐ.நா. உட்பட பல சர்வதேச அமைப்பகள் பாராட்டுதெரிவித்துள்ளன என்றார்.
இதற்கிடையே குஜராத்தில் அமெரிக்க குளிர்பான நிறுவனமான கோகோ கோலா பாட்லிங் பிளாண்டை மோடியின்ஆதரவாளர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் மோடிக்கு விசா வழங்குவது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று அமெரிக்க காங்கிரசின்உறுப்பினரும் இந்திய நட்புறவுக் குழுவைச் சேர்ந்தவருமான பிராங்க் பேலோன் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் இது தொடர்பாக அவர் கூறுகையில், நரேந்திர மோடிக்கு மீண்டும் விசா கிடைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன்.என்னுடைய கோரிக்கையை ஏற்று அமெரிக்க அரசு, மோடிக்கு விசா வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
ஆனால் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. இந்த நவீன உலகத்தில் இந்துவோ, முஸ்லிமோ அல்லதுகிறிஸ்தவரோ யாராக இருந்தாலும் அவர்களது மத அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்துஎன்றார்.
இதற்கிடையே நரேந்திர மோடிக்கு விசா வழங்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக இன்று தெரிவித்துவிட்டது. இதுதொடர்பாக இந்திய அரசின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications