பழனி-கொடைக்கானல் மலைகளுக்கு இடையே ரோப் கார்
சென்னை:
பழனி மலைக்கும் கொடைக்கானல் மலையின் மேற்குப் பகுதிக்கும் இடையே 15 கி.மீ. தூரத்துக்கு ரோப் கார் வசதியைஅறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்து அறநிலையத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பி.சி.ராமசாமிசட்டசபையில் இன்று பேசியதாவது:
பழனி முருகன் கோவிலுக்கும் இடும்பம் மலைக் கோவிலுக்கும் இடையே ரூ. 4 கோடி செலவில் ரோப் கார் வசதிஏற்படுத்தப்படும். கோவில் நிதியில் இருந்து இத் திட்டம் நிறைவேற்றப்படும்.
அதே போல பழனிக்கும் கொடைக்கானல் மலையின் மேற்குப் பகுதிக்கும் இடையே 15 கி.மீ. தூரத்துக்கு ரோப் கார் வசதிசெய்யப்படும். பழனி ஆலய நிர்வாகமும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி வாரியமும் இணைந்து ரூ. 30 கோடியில் இத் திட்டத்தைநிறைவேற்ற உள்ளன.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலின் அடிவாரத்தில் இருந்து மலையின் மேல்பகுதிக்குச் செல்ல ரூ. 4 கோடியில் ரோப்கார் வசதி செய்யப்படும். வசதிமிக்க கோவில்களின் நிதியில் இருந்து கடன் பெற்று இத் திட்டம் நிறைவேற்றப்படும.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பி நிற்கும் வகையில் ரூ. 80 லட்சம் செலவில் குளத்தின் தரைப்பகுதியில் காங்க்ரீட் தளம் அமைக்கப்படும். கோவில் நிதியில் இருந்தே இத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த ஆண்டில் 1008 கோவில்களுக்கு குட முழுக்கு செய்யப்படும்.
பண்ணாரி அம்மன் கோவில், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில், மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில்,திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், கோவை தண்டுமாரியம்மன் கோவில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்கோவில் ஆகியவற்றுக்கு தங்க ரதம் செய்யப்படும்.
ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வடபழனி ஆகிய கோவில்களுக்கு தங்க ஆபரணங்கள் செய்ய்படும்.இதற்காக திரு ஆபரணக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் உள்ள 6,000 கோவில்களை பராமரிக்க, புதுப்பிக்க கோவில் ஒன்றுக்கு தலா ரூ. 25,000வழங்கப்படும். இதற்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பகுதிகளில் உள்ள 4,000 கோவில்களை தலா ரூ, 25,000 செலவில் புதுப்பிக்கரூ. 10 கோடி ஒதுக்கப்படும்.
இதற்கான நிதி வசதியான கோவில்களின் நிதியில் இருந்து எடுத்து பயன்படுத்தப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications