பிரதமர், அத்வானிக்கு சிறந்த எம்பி விருது
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட 4 பேருக்கு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விருதுவழங்கப்பட்டுள்ளது.
சிறப்பாகப் பணியாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்முறை சிறந்தபாராளுமன்ற உறுப்பினர்களாக பிரதமர் மன்மோகன் சிங், லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மனிதவளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், அரசியலைஅரசியலாக்காமல் அதை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றால் 2020ம் ஆண்டுக்குள் நாம் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகிவிடலாம்.
ஜனநாயகத்தின் மீது இப்போது மக்களுக்கு சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. இதை நீங்கள் களைய வேண்டும்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் கலவரங்களால் பாதிக்கப்படும் பழமையான தேர்தல்நடைமுறைகளை மாற்றவேண்டும். அரசியல்வாதிகள் தவறாக நடக்க ஆரம்பித்தால் அது நாட்டுக்கே பெரும் ஆபத்தாக முடியும்.
சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. அதுபோன்றசம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது என்றார் ஜனாதிபதி.
இதன் பிறகு பேசிய பிரதமர் மன்மோகன், அரசியல் குறித்து பொது மக்களிடையே தவறான கருத்துகள் பரவிவருவதைஅனைவரும் ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். பாரளுமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க நாம் விடக்கூடாது.
நாம் ஒருவருக்கொருவர் தேவையில்லாமல் குற்றம் கூறிக்கொண்டிருக்காமல் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்எவ்வாறு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை உணர்ந்து நாமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications